ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி கிடையாது.. மாணவர்களுக்கு மத்தியில் அஸ்வின் பேச காரணம் என்ன?

R Ashwin 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஓய்வு பெற்றார். 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இந்தியாவுக்காக இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் முத்தையா முரளிதரனுக்கு நிகராக அதிக தொடர்நாயகன் விருதுகளையும் வென்று அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

2012 – 2024 வரை சொந்த மண்ணில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருப்பதற்கும் அஸ்வின் முக்கிய காரணமாக அமைந்தார். இருப்பினும் தற்போது 38 வயதாவதால் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அஸ்வின் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

- Advertisement -

ஹிந்தி மொழி:

அப்போது எத்தனை ஆங்கில மாணவர்கள் இங்கே இருக்கிறீர்கள் என்று அஸ்வின் கேட்டார். அதற்கு அரங்கில் இருந்த மணவர்களிடம் பெரியளவில் சத்தம் வரவில்லை. பின்னர் எவ்வளவு தமிழ் மாணவர்கள் இருக்கிறீர்கள் என்று கேட்ட போது அரங்கம் அதிரும் அளவுக்கு சத்தம் வந்தது. அடுத்ததாக இந்தி மாணவர்கள் எவ்வளவு இருக்கிறீர்கள் என்று அஸ்வின் கேட்ட போது சத்தமே வரவில்லை.

அப்போது “இந்த இடத்தில் இதைச் சொல்ல விரும்பினேன். அதாவது இந்தி நமது தேசத்தின் அதிகாரப்பூர்வ மொழி மட்டுமே. தேசிய மொழி கிடையாது” என்று அஸ்வின் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அஸ்வின் கூறியது பின்வருமாறு. “என்னால் கேப்டன்ஷிப் செய்ய முடியாது என்று யாராவது சொன்னால் அதை நிறைவேற்ற நான் விழிப்பேன். ஆனால் என்னால் அது முடியும் என்று அவர்கள் சொன்னதால் அந்த ஆர்வத்தை நான் இழக்கிறேன்”

- Advertisement -

ஐபிஎல் தொடரில் அஸ்வின்:

“ஏதாவது ஒரு இன்ஜினியர் ஆசிரியர் என்னால் கேப்டனாக வர முடியாது என்று கூறியிருந்தால் நான் அதை தொடுவதற்காக கடினமாக உழைத்திருப்பேன். அந்த வகையில் மாணவர்களான நீங்கள் எப்போதும் சாதிக்க நினைப்பதை நிறுத்தக்கூடாது. நீங்கள் ஆர்வமாக இல்லை என்றால் கற்றல் நின்று விடும்”

இதையும் படிங்க: தலை கீழாக நின்னாலும் சஞ்சு சாம்சனுக்கு சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் கிடையாது – காரணம் இதோ

“உன்னதம் என்பது அலமாரியில் மட்டுமே இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் மீண்டும் விளையாட உள்ளார். அதே போல டிஎன்பிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து இன்னும் சில வருடங்கள் விளையாட உள்ளதாகவும் அஸ்வின் தம்முடைய ஓய்வு அறிவிப்பின் போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement