பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த தொடர் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடமில்லை :
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேச அணிக்களும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் பங்கேற்கின்றன.
குரூப் சுற்று பிரிவில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன் பின்னர் குரூப் சுற்று பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கும் தகுதிபெறும். அரையிறுதியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி வரும் ஜனவரி 12-ஆம் தேதி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தலைமையில் அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் சஞ்சு சாம்சன் சமீபத்தில் டி20 இந்தியா அணியின் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் அவருக்கு டி20 போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும் ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரை ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக திகழ்வதாலும், அவர் மிடில் ஆர்டரில் விளையாடுவதாலும் அவரே முதல் தேர்வாக இருப்பார்.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் வாய்ப்பு மறுக்கப்படவுள்ள 3 சீனியர் வீரர்கள் – லிஸ்ட் இதோ
அதேபோன்று அவருக்கு மாற்று வீரராக இந்திய அணியில் கே.எல் ராகுல் அணியில் இடம் பிடிப்பார் என்பதனால் துவக்க வீரராக மட்டுமே விளையாடும் சஞ்சு சாம்சனுக்கு நிச்சயம் ஒருநாள் அணியில் இடம் கிடைக்காது என்று கூறப்படுகிறது.