உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றும் முனைப்போடு தற்போது தயாராகி வருகிறது. அந்த வகையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை ஜனவரி 12-ஆம் தேதி அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
வாய்ப்பு மறுக்கப்படவுள்ள 3 இந்திய சீனியர் வீரர்கள் :
இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் அணியில் தொடர்ந்து விளையாடி வருவதால் அவர்களின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு அவர்கள் இந்து தொடரிலும் விளையாடுவார்கள். ஆனால் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் 3 சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று தெரிகிறது. அந்த மூன்று வீரர்கள் யாரெனில் :
ஒன்று கே.எல் ராகுல் : கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது துணை கேப்டனான ஹார்டிக் பாண்டியா காயம் அடைந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் துணை கேப்டனாக செயல்பட்டிருந்தார். அதோடு ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி அந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு இழந்ததாலே கே.எல் ராகுல் முதன்மை விக்கெட் கீப்பராக இருந்தார்.
ஆனால் தற்போது ரிஷப் பண்ட் காயத்திலிருந்து மீண்டு வந்து விட்டதால் அவரே முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பார் என்பதால் கே.எல் ராகுலுக்கு சாம்பியன் டிராபி தொடரில் வாய்ப்பு மறுக்கப்படலாம் என்று தெரிகிறது. இரண்டு ஜடேஜா : தற்போதுள்ள இந்திய அணியில் இளம் வீரர்களான அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அசத்தி வருவதால் இந்திய அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அவர்களுக்கே பெரும்பாலும் தேர்வுக்குழு வாய்ப்பை வழங்க நினைக்கும்.
மேலும் ரவீந்திர ஜடேஜாவும் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் ஃபார்ம் அவுட்டாகி தவித்து வருவதால் அவரை ஓரம் கட்டி விட்டு இவர்கள் இருவருக்கும் முதன்மை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. மூன்று முகமது ஷமி : கடந்து 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடிய முகமது ஷமி மிகச்சிறப்பாக விளையாடி அதிக விக்கெட்டுகளை விழித்திருந்தாலும் இன்றளவும் காயத்திலிருந்து பூரணமாக குணமடையாமல் தவித்து வருகிறார்.
இதையும் படிங்க : இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் ஜெய்ஸ்வால் தான்.. அதுக்கு என்ன காரணம் தெரியுமா – தினேஷ் கார்த்திக்
தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் அவர் விளையாடி வந்தாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடினால்தான் அவருக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் தற்போது வரை முகமது ஷமியின் நிலை என்ன என்ற முழுமையாக தகவல் வெளியாகவில்லை. இதன் காரணமாக இங்கிலாந்து தொடருக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை என்றால் நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இருந்தும் அவர் வெளியேற்றப்படுவார் என்பது உறுதி.