இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் ஜெய்ஸ்வால் தான்.. அதுக்கு என்ன காரணம் தெரியுமா – தினேஷ் கார்த்திக்

DK-and-Jaiswal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால்தான் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் என முன்னாள் வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக் புகழ்ந்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஜெய்ஸ்வால் அந்த அறிமுக போட்டியிலிருந்து அசத்தலான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தி வருகிறார்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் :

2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 19 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் நான்கு சதம் மற்றும் 10 அரைசதம் என 1798 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டும் இன்றி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கூட ஒரு சதம் அடித்திருந்த அவர் 391 ரன்கள் குவித்து இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் குவித்த வீரராகவும் திகழ்ந்தார்.

- Advertisement -

அதோடு 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதம் என 723 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். ஆனாலும் அவருக்கு ஒருநாள் போட்டியில் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கருத்தில் கொண்டு அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்தான் என தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் இந்திய அணியின் எதிர்கால சூப்பர் ஸ்டார். ஏனெனில் அவரால் மூன்று விதமான ஃபார்மேட்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அவரது பேட்டிங் பார்க்கும்போது மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர் விளையாடும் ஷாட்கள் அனைத்தும் கன் போன்று இருக்கின்றன.

இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள – 3 அறிமுக வீரர்கள்

அவருடைய சிறப்பான எதிர்காலத்திற்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அவருக்கு இருக்கும் பேட்டிங் திறமையை வைத்து நான் கூறுவது யாதெனில் : நிச்சயம் அவர்தான் இந்திய அணியின் எதிர்கால சூப்பர் ஸ்டார் என தினேஷ் கார்த்திக் அவரை புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement