ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற முடிந்த 5 போட்டிகள் கொண்ட பாடல் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியானது அடுத்ததாக இந்திய மண்ணில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
ஒருநாள் அணிக்கு அறிமுகமாக வாய்ப்பு 3 இந்திய வீரர்கள் :
இந்த ஒருநாள் தொடரானது எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதோடு கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததால் அதற்கு பழி தீர்க்கும் விதமாகவும் இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகிறது. இதன் காரணமாக சில வீரர்களுக்கு இந்த இங்கிலாந்து தொடரில் அறிமுக வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலக கோப்பையை இந்திய அணி இழந்த வேளையில் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கருத்தில் கொண்டு சில மாற்றங்களை கையில் எடுக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜனவரி 12-ஆம் தேதி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணி அறிவிக்கப்பட இருக்கும் வேளையில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் மூன்று இளம் வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது.
அந்த வகையில் இந்திய அணிக்காக அறிமுகமாக இருக்கும் அந்த மூன்று வீரர்கள் யாரெனில் : முதலாவது ஜெய்ஸ்வால் : 23 வயதான இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான ஜெய்ஸ்வால் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாலும் உள்ளூர் போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டு உள்ளதாலும் ரோகித் சர்மா அல்லது கில் ஆகிய இருவரில் ஒருவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இரண்டாவது நிதிஷ்குமார் ரெட்டி : ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அவர் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கும் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : இந்திய ஒருநாள் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அடிக்கவுள்ள ஜாக்பாட் – அப்போ ஆப்பு யாருக்கு?
மூன்றாவது ஹர்ஷித் ராணா : ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய தொடரிலும் இடம் பிடித்த அவர் ஓரளவு சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.