- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 மட்டுமல்ல ஒருநாள் அணியிலும் இடம்பிடிக்க வருண் சக்கரவர்த்திக்கு கிடைத்துள்ள – அற்புதமான வாய்ப்பு

தமிழகத்தை சேர்ந்த மிஸ்ட்ரி சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கடந்த 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகி இருந்தாலும் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தார். அதே போன்று அந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

ஒருநாள் அணியிலும் இடம்பிடிக்கப்போகும் வருண் :

ஆனால் ஒரு சில போட்டிகளிலேயே மோசமான செயல்பாடு காரணமாக இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். பின்னர் மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்த வருண் சக்கரவர்த்திக்கு இந்த ஆண்டு இந்திய டி20 அணியில் இடம் கிடைத்தது.

- Advertisement -

அந்த வகையில் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடர்களில் இடம் பிடித்து விளையாடிய அவர் அந்த இரண்டு தொடர்களிலுமே தனது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தற்போது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் ஒருநாள் அணியில் அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவர்தான் சுழற்பந்து வீச்சாளர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

குல்தீப் யாதவ் காயமடைந்து இருப்பதால் அவர் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடிப்பது கடினமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்திய ஒருநாள் அணியில் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் தேவைப்படுவதால் அந்த இடத்திற்கு போட்டியில் தற்போது ரவி பிஷ்னாய் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவர் தான் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் உழைச்சு வந்தது நம்ப முடியல.. ஈஸியா சதமடிச்சாலும்.. தடுமாறி கம்பேக் கொடுப்பாரு.. ஆலன் பார்டர்

இந்நிலையில் இந்தியாவில் எதிர்வரும் விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணிக்காக இடம்பிடித்துள்ள வருண் சக்ரவர்த்தி இந்த தொடரில் அசத்தி விட்டால் நிச்சயம் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் அவரால் இடம் பிடிக்க முடியும் என்ற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -