ஸ்டுவர்ட் பின்னியின் 11 வருட ஸ்பெஷல் சாதனையை உடைத்த வருண்.. ஷமியை முந்தி அபார சாதனை

Varun Chakravarthy 2
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடைசிப் போட்டியில் நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 250 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79, பாண்டியா 45 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி 45.3 ஓவரில் 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்ற இந்தியா குரூப் பி பிரிவில் முதலிடம் பிடித்து செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தகுதி பெற்றது.

- Advertisement -

வருண் அபராதம்:

முன்னதாக 2021ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான வருண் சக்கரவர்த்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் அறிமுக ஒருநாள் போட்டியுடன் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் அவரை இந்திய டி20 அணிக்குள் கொண்டு வந்தார்.

அந்த வாய்ப்பில் அபாரமாக பவுலிங் செய்த வருண் சக்கரவர்த்தி கடந்த தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இங்கிலாந்து டி20 தொடர்களில் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். மேலும் 2025 விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரிலும் தமிழ்நாடு அணிக்காக அசத்திய காரணத்தால் கடைசி நேரத்தில் அவர் சாம்பியன்ஸ் ட்ராபியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வாய்ப்பில் தனது முதல் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியிலேயே நியூஸிலாந்துக்கு எதிராக வருண் 10 ஓவரில் 42 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

சாதனை கம்பேக்:

இதன் வாயிலாக சாம்பியன்ஸ் டிராபியில் தனது அறிமுகப் போட்டியிலேயே சிறந்த பந்து வீச்சை (5/42) பதிவு செய்த இந்திய வீரர் என்ற ஷமியின் சாதனையை உடைத்து அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இதே தொடரில் வங்கதேசத்திற்கு எதிராக ஷமி 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: பிட்ச் பற்றி தெரிஞ்சும் அந்த 2 இந்திய பேட்ஸ்மேன்கள் வெற்றியை பறிச்சுடாங்க.. கேப்டன் சான்ட்னர் பேட்டி

மேலும் தனது 2வது ஒருநாள் போட்டியிலேயே வருண் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் வேகமாக 5 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் வருண் படைத்துள்ளார். இதற்கு முன் 2014ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக மிர்பூரில் இந்தியாவின் ஸ்டுவர்ட் பின்னி தனது 3வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.

Advertisement