
இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணியின் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் மூன்றாவது போட்டி ஜனவரி 28ஆம் தேதி ராஜ்கோட் நகரில் இரவு 7 மணிக்கு துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் ஷமி ஒரு வழியாக 14 மாதங்கள் கழித்து விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ஆட்டத்தை துவங்கிய இங்கிலாந்துக்கு பில் சால்ட் 5 ரன்களில் பாண்டியா வேகத்தில் அவுட்டானார்.
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் அடுத்ததாக வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் நிதானமாக விளையாடி இரண்டாவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 24 ரன்களில் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கினார். அடுத்ததாக வந்த இளம் வீரர் ஹரி ப்ரூக்கை இந்தியாவின் இளம் வீரர் ரவி பிஸ்னோய் 8 ரன்களில் போல்டாக்கினார்.
அடுத்த ஓவரில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய டக்கெட் 51 (28) ரன்களில் அக்சர் படேல் சுழலில் சிக்கினார். அதற்கடுத்ததாக வந்த லியம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் வந்த ஜேமி ஸ்மித் 6, ஜெமி ஓவர்டன் 0 வருண் சக்கரவர்த்தி சுழலில் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தார்கள். அதோடு நிற்காத அவர் அதற்கடுத்ததாக வந்த பிரைடன் கார்ஸ் 3, சோப்ரா ஆர்ச்சர் 0 ரன்களில் அவுட்டாக்கி மிரட்டினார்.
இறுதியில் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி 43 (24), மார்க் வுட் 10*, அடில் ரசித் 10* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இங்கிலாந்து 171-9 ரன்கள் எடுத்தது. குறிப்பாக 16 ஓவரில் 127-8 என தடுமாறிய போது லிவிங்ஸ்டன் உள்ளிட்ட மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி 171 ரன்கள் குவிக்க உதவினார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
இதையும் படிங்க: 2024 உலக கிரிக்கெட்டின் அரசனாக ஐசிசி சோபர்ஸ் மணி மகுடத்தை சூடிய பும்ரா.. வரலாற்றுச் செய்யாத சாதனை
குறிப்பாக கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் 5 விக்கெட்டுகள் எடுத்த வருண் சக்கரவர்த்தி இதையும் சேர்த்து 16 போட்டிகளில் 2வது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வேகமாக 2 முறை 5 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அந்தப் பட்டியல் (போட்டிகள்):
1. வருண் சக்கரவர்த்தி (இந்தியா): 16
2. அஜந்தா மெண்டிஸ் (இலங்கை): 22
3. அஸ்டன் அகர் (ஆஸ்திரேலியா): 30