- Advertisement -
இந்திய கிரிக்கெட்

6 பந்துவீச்சாளர்கள் இருந்தும் இலங்கை வீரர்களை திணறவைத்த வருண் சக்ரவர்த்தி – அப்படி என்ன செய்தார் தெரியுமா ?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி வெறும் 5 பேட்ஸ்மேன்கள் உடனே களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடியதால் 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் தவான் 40 ரன்கள் குவித்தார். அவரைத் தவிர பெரிய அளவில் பேட்ஸ்மென்கள் யாரும் சோபிக்கவில்லை.

இதன் காரணமாக இந்திய அணி மிகக்குறைந்த ரன்களையே எடுக்க முடிந்தது. அதன் பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி ஆனது எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் கடைசி ஓவரின் 4-வது பந்தில் தான் இலங்கை அணி வெற்றிக்கு சென்றது.

- Advertisement -

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களது சிறப்பான பந்து வீச்சின் மூலம் இலங்கை அணியை கடைசிவரை கட்டுக்குள் கொண்டு வைத்து கடைசி ஓவரில் வெற்றி வாய்ப்பை இழந்தனர். இந்திய அணி சார்பாக ஆறு பந்துவீச்சாளர்கள் களமிறங்கினர். இந்நிலையில் நவ்தீப் சைனி இந்த போட்டியில் ஒரு ஓவர் கூட பௌலிங் வழங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

மற்றபடி 5 பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினர். இருப்பினும் தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி இலங்கை அணியை கிட்டத்தட்ட தனது மாயாஜால பந்துவீச்சின் மூலம் திணறடித்து விட்டார் என்றே கூற வேண்டும். ஏனெனில் அவரது ஓவரில் இலங்கை வீரர்கள் ரன் குவிக்க மிகவும் தடுமாறினர்.

அதுமட்டுமின்றி 4 ஓவர்கள் வீசி அவர் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதில் சிறப்பம்சம் யாதெனில் ஓவருக்கு 5 க்கும் குறைவாக ரன் கொடுத்த இந்திய வீரர் இவர் மட்டுமே இந்தப் போட்டியில் திகழ்ந்தார். இவரது பந்துவீச்சு எதிர்கொள்வதில் ஏகப்பட்ட சிக்கல்களை இலங்கை வீரர்கள் சந்தித்ததை நாம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by