தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்த இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்திய அணியில் என்னுடைய ரோல் இதுதான் : வருண் சக்கரவர்த்தி
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த வருண் சக்கரவர்த்தி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார். இந்த போட்டியில் பந்துவீச்சில் அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை.
ஏனெனில் ஹார்டிக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டம் மற்றும் மிகச் சிறப்பான பவுலிங் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனாலும் இந்த தொடரில் மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்திக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தொடர் நாயகன் விருதுக்கு பிறகு பேசிய வருண் சக்கரவர்த்தி கூறியதாவது : இந்த போட்டி உண்மையிலேயே இந்த தொடரிலேயே மிகச் சிறப்பாக போட்டியாக அமைந்தது. நான் இந்த போட்டியில் மிக மகிழ்ச்சியுடன் விளையாடியிருந்தேன். இந்திய அணியில் என்னுடைய ரோல் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுப்பது மட்டும் தான்.
நான் எப்போது பந்துவீச சென்றாலும் விக்கெட் எடுக்க வேண்டும் என்று பந்து வீசுகிறேன். அதனால் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அட்டாக் செய்து விக்கெட் வீழ்த்த பார்க்கிறேன். இந்திய அணியில் எனக்கு கொடுக்கப்பட்ட ரோலை நான் இதுவரை மிகச் சிறப்பாக செய்து வருவதில் மிகவும் மகிழ்ச்சி.
இதையும் படிங்க : ஸ்டார்டிங் லாம் சூப்பரா இருந்துச்சி.. ஆனா பினிஷிங் தான் சரியில்ல.. தோல்வி குறித்து – எய்டன் மார்க்ரம் வருத்தம்
ஒவ்வொரு தொடரிலும் என்னுடைய பந்துவீச்சில் நான் நிறைய விடயங்களை புதிது புதிதாக பயன்படுத்தி வருகிறேன். அதனால் என்னுடைய பௌலிங் நல்ல முன்னேற்றமும் கண்டு வருகிறது. இந்த தொடர் நாயகன் விருதை எனது அம்மா, அப்பா மற்றும் சகோதரிக்கு அர்ப்பணிக்கிறேன் என்றும் வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.



