இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்த 5 போட்டியில் கொண்ட டி20 தொடரினை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்திய அணியிடம் தோற்க இதுவே காரணம் : எய்டன் மார்க்ரம்
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வருமா 73 ரன்களையும், பாண்டியா 63 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை மட்டுமே குவித்தது இதன் காரணமாக 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தலான வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 65 ரன்களையும், பிரேவிஸ் 31 ரன்களையும் குவித்திருந்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில் :
உண்மையில் இந்த தோல்வி எங்களுக்கு வருத்தமாகவே உள்ளது. 230 ரன்கள் என்கிற இலக்கினை நோக்கி செல்லும் போது சிறப்பான துவக்கம் தேவை. அந்த வகையில் இந்த போட்டியில் எங்களது அணியின் டாப் 3 வீரர்கள் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனாலும் நல்ல துவக்கத்தை நாங்கள் வீணடித்ததாக உணர்கிறோம்.
இதையும் படிங்க : 2002 ரன்ஸ் 101 விக்கெட்ஸ்.. புதிய உலக சாதனை படைத்த பாண்டியா.. யுவ்ராஜை முந்தி வரலாற்று சாதனை
மிடில் ஓவர்களின் போது எங்களால் அதே முமென்ட்டத்துடன் செல்ல முடியவில்லை. இந்த தோல்வியிலிருந்து பல்வேறு பாடங்களை ஒரு குழுவாக கற்றுக் கொண்டுள்ளோம். எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரிலும் இங்கு ஒரு சில போட்டிகளில் விளையாட இருக்கிறோம். எனவே இந்த தொடரானது எங்களுக்கு நல்ல ஒரு தொடராக அமைந்தது என எய்டன் மார்க்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.



