டி20 உலககோப்பை தொடருக்காக நான் இப்படி தான் ரெடி ஆகுறேன்.. கப் முக்கியம் – வருண் சக்கரவர்த்தி பேட்டி

Varun Chakaravarthy
- Advertisement -

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இதன் காரணமாக இறுதிவரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

என்னுடைய திட்டம் இதுதான் : வருண் சக்கரவர்த்தி

நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்ட வேளையில் நிச்சயம் மீண்டும் ஒருமுறை கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் அளவிற்கு இந்திய அணி பலமாகவே உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். தற்போதைய டி20 அணியில் பேட்ஸ்மேன்களுக்கு ஈடாக மேட்ச் வின்னிங் பவுலர்களும் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் டி20 போட்டியில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கும் வருண் சக்கரவர்த்தி எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்கினை வகிப்பார் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் தனது திட்டம் என்ன? என்பது குறித்து சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரை பொறுத்தவரை நான் என்னுடைய அடிப்படை திறன்களை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன்.

- Advertisement -

ஏனெனில் எந்த ஒரு அணிக்கு எதிராக பந்துவீசும் போதும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக என்ன திட்டத்தை செயல்படுத்த போகிறேன் என்பதை முன்கூட்டியே கணித்து அதில் என்னுடைய பலம் என்னவோ அதன்படியே பந்துவீச காத்திருக்கிறேன். குறிப்பாக உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அடிப்படை திறன் என்பது மிகவும் முக்கியம்.

இதையும் படிங்க : 14 சிக்ஸ் 33 பந்தில் 100.. கில், ஜிதேஷை விட பெஸ்ட்.. 2வது வேகமான சாதனை படைத்த இஷான் கிசான்

அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணிக்கு எதிராக நான் பந்து வீசினாலும் தொடர்ச்சியாக சரியான லைன் மற்றும் லெந்த்தில் பந்துவீச விரும்புகிறேன். அதேபோன்று எளிதில் அடிக்க முடியாத பந்துகளையும் வீசுவதற்காகவும் நான் தயாராகி வருகிறேன். இம்முறையும் கோப்பையை கைப்பற்ற கடினமாக உழைத்து வருவதாகவும் வருண் சக்கரவர்த்தி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement