சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மிக முக்கியமான லீக் போட்டியில் கொல்கத்தா அணி சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தங்களது ஆறாவது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு சென்றது. இந்த தோல்வியால் தற்போது கொல்கத்தா அணியின் பிளே ஆப் வாய்ப்பும் தற்போது சிக்கலான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் தொடரில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய வருண் சக்ரவர்த்தி :
இருப்பினும் இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக விளையாடிய தமிழக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி ஐ.பி.எல் வரலாற்றில் அமித் மிஸ்ரா மற்றும் ரஷித் கான் ஆகியோரது மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை சமன் செய்து அசத்தியுள்ளார். அது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் வருண் சக்கரவர்த்தி நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்று சென்னை அணிக்கு எதிராக மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த 2 விக்கெட்டுகள் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தனது 100-ஆவது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளராக அதிவேகமாக 100 விக்கெட்டுகளை பவுலர்களாக அமித் மிஸ்ரா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் முதலிடத்தில் இருந்தனர். அவர்கள் இருவரும் 83 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் இருந்த வேளையில் நேற்று அந்த சாதனையை வருண் சக்கரவர்த்தி சமன் செய்தார்.
நேற்றைய சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின் மூலம் தனது 83-வது போட்டியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி 100 விக்கெட்டுகளை கைப்பற்றி அவர்களது இந்த சாதனை சமன் செய்துள்ளார். அவர்களுக்கு அடுத்து யுஸ்வேந்திர சாஹல் 84 போட்டிகளிலும், சுனில் நரேன் 86 போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க : ஒய்ட் பால் மாஸ்டர் ரோஹித் ரிட்டையராகப் போறாருன்னு 4 மாசம் முன்னாடியே எனக்கு தெரியும்.. கில்கிறிஸ்ட் வாழ்த்து
கடந்த 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி இதுவரை 83 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.



