- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் ஒரு விக்கெட் போதும்.. தனக்கென ஒரு தடம் பதிக்க காத்திருக்கும் வருண் சக்கரவர்த்தி – விவரம் இதோ

தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கடந்த 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 84 ஆட்டங்களில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் போட்டிகளின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

வருண் சக்கரவர்த்திக்கு காத்திருக்கும் வாய்ப்பு :

அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு இந்திய டி20 அணியில் அவர் இடம் பிடித்திருந்தாலும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் வெகு விரைவாகவே மோசமான பௌலிங் ஃபார்ம் காரணமாக மீண்டும் இந்திய அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். இப்படி திறமையான வீரர் உடனடியாக கழட்டி விடப்பட்டது அப்போதே பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியது.

- Advertisement -

ஆனால் மீண்டும் தனது கம்பேக்கிற்காக கடுமையாக முயற்சி செய்த அவர் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் விக்கெட் வேட்டை நிகழ்த்த தொடங்கினார். அதற்கடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் வந்ததற்கு பிறகு மீண்டும் டி20 அணிக்குள் கம்பேக் கொடுக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அப்படி தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான முதன்மை சுழற்பந்து வீச்சாளராகவும் விளையாட இருக்கிறார். மேலும் இந்த 2025-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் நான்கு போட்டியில் விளையாடி 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இதுவரை 31 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் ஒரு புதிய சாதனை நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்த இருக்கும் சாதனை யாதெனில் :

இதையும் படிங்க : முதல் போட்டியில் கலக்கிய ஹார்டிக் பாண்டியா இரண்டாவது போட்டியில் தடுமாற என்ன காரணம்? – இர்பான் பதான்

கடந்த 2021-ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 31 போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அவர் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்து தனக்கென முதல் தடத்தினை இந்திய அணி சார்பாக பதிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -