இதுமட்டும் போதும் அடுத்த டி20 உலகக்கோப்பைக்கான இடம் கன்பார்ம் – அசத்திய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி

Varun
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டர்பன் மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 61 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் இந்திய அணியானது இந்த நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

தனது இடத்தினை உறுதிசெய்த வருண் சக்கரவர்த்தி :

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவிக்க 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதனால் தென்னாப்பிரிக்க அணியின் கையே இந்த போட்டியில் ஓங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இரண்டாம் பாதியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியானது 17.5 ஓவர்களிலேயே தென்னாப்பிரிக்க அணியை 141 ரன்களுக்கு சுருட்டி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி அசத்தலான வெளிப்படுத்தினார்.

இந்த போட்டியில் மட்டும் நான்கு ஓவர்களை வீசிய அவர் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் அவர் வீழ்த்திய வீரர்கள் யாரெனில் துவக்க வீரர் ரிகல்டன், அதிரடி வீரர்களான கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் தான்.

- Advertisement -

இப்படி தென்னாப்பிரிக்க அணியின் முதுகெலும்புவாக பார்க்கப்படும் முக்கிய வீரர்களை வீழ்த்தி தனது பார்மை நிரூபித்த வருண் சக்கரவர்த்தி சர்வதேச டி20 போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சை நேற்று பதிவு செய்து அசத்தியிருந்தார். இதன் மூலம் அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை வரை இந்திய அணியில் இடம் பிடிப்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : காட்டடி க்ளாஸென், மில்லரை அடக்கி இந்தியாவை ஜெய்க்க வைத்தது அந்த 2 பேர் தான்.. பவுச்சர் பாராட்டு

ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களாக அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் பார்க்கப்படும் வேளையில் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் வருண் சக்கரவர்த்திக்கு ஆதரவு அளித்து வருகிறார். அதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணி இடம் பிடித்த அவர் தற்போது அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதன் காரணமாக நிச்சயம் அவருக்கு அடுத்த டி20 உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

Advertisement