அர்ஷ்தீப் சிங்கின் மாபெரும் சாதனையை சமன் செய்த வருண் சக்கரவர்த்தி – விவரம் இதோ

Varun Chakaravarthy
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார் என்று பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் லீக் சுற்று போட்டிகளில் அவருடைய செயல்பாடு திருப்திகாரமாக அமைந்துள்ளது.

வருண் சக்கரவர்த்தி நிகழ்த்திய சாதனை :

அந்தவகையில் நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கூட நான்கு ஓவர்கள் பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இந்த உலக கோப்பை தொடரில் பெரும்பாலும் பந்துவீச்சாளர்கள் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் அடுத்த போட்டியில் சற்று ரன்களை விட்டுக் கொடுக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் வருண் சக்கரவர்த்தியை பொருத்தவரை கட்டுக்கோப்புடன் பந்துவீசி வருகிறார். இந்நிலையில் நேற்று பெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கின் சாதனை ஒன்றினையும் அவர் சமன் செய்துள்ளார்.

அந்த வகையில் வருண் சக்கரவர்த்தி நிகழ்த்திய சாதனை யாதெனில் : அர்ஷ்தீப் சிங் கடந்த ஜூன் 2024 முதல் டிசம்பர் 2025 ஆம் தேதி வரை இந்திய அணிக்காக விளையாடிய 17 ஆட்டங்களில் தொடர்ந்து அனைத்து போட்டியிலும் குறைந்தது ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தியிருந்தார். அந்த சாதனையை தற்போது வருண் சக்கரவர்த்தியும் சமன் செய்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 6 ஆவது சர்வதேச வீரராகவும், முதல் இந்திய வீரராகவும் ஹார்டிக் பாண்டிய நிகழ்த்திய – அசத்தல் சாதனை

கடந்த 2025 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு வருண் சக்கரவர்த்தி விளையாடிய 17 ஆட்டங்களில் அனைத்து போட்டியிலுமே குறைந்தது ஒரு விக்கெட்டையாவது கைப்பற்றியுள்ளார். கடைசியாக நடைபெற்ற 17 போட்டிகளிலும் தொடர்ச்சியாக விக்கெட் வீழ்த்தியுள்ள அவர் அடுத்த போட்டியிலும் விக்கெட் எடுக்கும் பட்சத்தில் அர்ஷ்தீப் சிங்கின் அந்த சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement