6 ஆவது சர்வதேச வீரராகவும், முதல் இந்திய வீரராகவும் ஹார்டிக் பாண்டிய நிகழ்த்திய – அசத்தல் சாதனை

Hardik Pandya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். நேற்று அகமதாபாத் நகரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 டி20 உலககோப்பை தொடருக்கான 36-வது லீக் போட்டியானது நடைபெற்றது.

ஹார்டிக் பாண்டியா நிகழ்த்திய வரலாற்று சாதனை :

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி லீக் சுற்று போட்டிகளின் முடிவில் எந்த ஒரு தோல்வியையும் சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்ததாக இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

- Advertisement -

நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா 21 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸர்களுடன் 30 ரன்களை குவித்தார். அதேபோன்று பந்துவீச்சிலும் 3 ஓவர்கள் வீசி 40 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

அவர் இந்த போட்டியில் அடித்த 30 ரன்கள் மூலம் ஆறாவது சர்வதேச வீரராகவும், முதல் இந்திய வீரராகவும் ஒரு மாபெரும் சாதனையை டி20 கிரிக்கெட் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார். அந்தவகையில் ஹார்டிக் பாண்டியா நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் 6000+ ரன்கள் மற்றும் 200+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரராக அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : கேப்டனும், கோச்சும் என்கிட்ட இதைத்தான் சொன்னாங்க.. நானும் அதை செஞ்சிட்டு வரேன் – ஷிவம் துபே பேட்டி

ஏற்கனவே சர்வதேச அளவில் கைரன் பொல்லார்டு, ஆண்ட்ரே ரசல், ஷாகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்த வேளையில் ஆறாவது வீரராக ஹார்திக் பாண்டியா இந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement