கேப்டனும், கோச்சும் என்கிட்ட இதைத்தான் சொன்னாங்க.. நானும் அதை செஞ்சிட்டு வரேன் – ஷிவம் துபே பேட்டி

Shivam Dube
- Advertisement -

நெதர்லாந்து அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற 36-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 17 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது நான்காவது தொடர் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அதன்படி நேற்றைய நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது.

இந்திய அணியின் இதுதான் என்னுடைய ரோல் : ஷிவம் துபே

பின்னர் 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை 176 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக 31 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 66 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி பந்து வீச்சிலும் இரண்டு விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தால் இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் ஷிவம் துபேவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தன்னுடைய சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஷிவம் துபே கூறுகையில் : இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருந்தாலும் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினேன்.

அழுத்தமான வேளையில் எவ்வாறு விளையாட வேண்டும் என்கிற அனுபவம் தற்போது எனக்கு கிடைத்துள்ளதால் என்னால் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் விளாச முடிகிறது. டி20 போட்டிகளை பொருத்தவரை கேப்டனும் பயிற்சியாளரும் என்னிடம் சொல்வது ஒரே ஒரு விடயம் மட்டும்தான். அதாவது மிடில் ஓவர்களில் நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ஸ்டிரைக் ரேட் அதிகமாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான்.

- Advertisement -

இதையும் படிங்க : பவுலர்களுக்கு இந்த சவால் இருக்கனும்.. அதனால் தான் அந்த முடிவை எடுத்தேன்.. வெற்றிக்கு பிறகு – கேப்டன் பேட்டி

அதன்படியே நான் மிடில் ஓவர்களில் விளையாடும்போது சற்று அழுத்தம் நிறைந்தாலும் துவக்கத்தில் சில பந்துகளை எடுத்து விளையாடி பின்னர் பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்கிறேன். அது எனக்கு சிறப்பாகவும் அமைந்து வருகிறது. சிக்சர் அடிக்க நிறையவே பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். டி20 போட்டிகளை பொறுத்தவரை சிக்ஸர்களை அடிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் தான் நான் அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறேன் என ஷிவம் துபே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement