- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவின் தோல்விக்கு குல்தீப் இல்லாததே காரணம்.. இப்போவாச்சும் அதை தியாகம் செய்ங்க கம்பீர்.. வருண் ஆரோன்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றது. மறுபுறம் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்தியா முதல் தொடரிலேயே பரிதாபமாக தோற்றது.

முன்னதாக அத்தொடரில் இந்தியாவுக்காக முதன்மை ஸ்பின்னர் குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தினர். குறிப்பாக பெரிய மைதானங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் குல்தீப் யாதவ் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார். ஆனால் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்கள் தேவை என்பதற்காக கௌதம் கம்பீர் தொடர்ந்து அவரை பெஞ்சில் அமர வைத்தார்.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:

அதன் பயனாக 441 நாட்கள் கழித்து அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் தோற்ற இந்தியா இத்தொடரின் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. குறிப்பாக 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவின் முதன்மை ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை தோற்கடித்தார். மறுபுறம் அவரைப் போன்ற திறமை கொண்ட குல்தீப் யாதவ் பெஞ்சில் அமர்ந்து கொண்டு இந்தியாவின் தோல்வியை மட்டுமே பார்த்தார்.

அதனால் வெறுப்பான இந்திய ரசிகர்கள் இப்போது சந்தோசமா? என்று கௌதம் கம்பீரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா தோல்வியடைந்தற்கு குல்தீப்பை தேர்ந்தெடுக்காததே காரணம் என்று முன்னாள் வீரர் வருண் ஆரோன் விமர்சித்துள்ளார். எனவே இனிமேலாவது கௌதம் கம்பீர் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தியாகம் செய்து விட்டு அவரை விளையாட வைக்க வேண்டுமென்று ஆரோன் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

தியாகம் செய்ங்க:

இது பற்றி ஆரோன் பேசியது பின்வருமாறு. “குல்தீப் யாதவ் முதல் போட்டியிலிருந்தே விளையாடியிருக்க வேண்டும். நீங்கள் ஒரு பேட்ஸ்மேனை தியாகம் செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவில் 2 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு விளையாட முடியாது. ஆனால் குல்தீப் போன்றவர் உங்களுக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார். எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் அடிக்காத ரன்களை அவர் விக்கெட்டுகளை எடுத்து பந்து வீச்சில் கட்டுப்படுத்துவார்”

இதையும் படிங்க: முதல் முறையாக ரோஹித் சர்மாவை பார்க்க பயந்தேன்.. முதல் சந்திப்பு குறித்து – திலக் வர்மா பேட்டி

“ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இருக்கும் போது மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆழமாக விளையாட முயற்சிக்க வேண்டும். இத்தனைக்கும் கடந்த காலங்களில் இந்தியா 7 பேட்ஸ்மேன்களுடன் விளையாடியதில்லை என்ற வரலாறு இல்லை. எனவே மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய குல்தீப் சிறந்த சிறந்த சேர்க்கையாக இருப்பார். 2வது போட்டியில் இந்தியா விக்கெட்டுகளை எடுப்பதற்கு பதில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தவறு செய்வதற்காக காத்திருந்தது. அவர்கள் பேட்ஸ்மேன்களை தங்களுடைய வழியில் அவுட்டாக்கவில்லை” என்று கூறினார்.

- Advertisement -