- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 போட்டிகளில் தல தோனியின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் அக்சர் படேல் – விவரம் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது இன்று ஜூலை 7-ஆம் தேதி நாட்டிங்காம் நகரில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

எம்.எஸ் தோனியின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் அக்சர் படேல் :

இதன் காரணமாக இன்றைய மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது. இவ்வேளையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான அக்சர் பட்டேல் டி20 போட்டிகளில் தோனியின் சாதனை ஒன்றினை தகர்க்க காத்திருக்கிறார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இன்று அக்சர் பட்டேல் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்றைய மூன்றாவது போட்டியில் விளையாட இருப்பதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் தனது 99 ஆவது ஆட்டத்தை விளையாட இருக்கிறார்.

இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் தோனியை பின்னுக்கு தள்ளி அவர் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறுவார்.

- Advertisement -

இதையும் படிங்க : நீண்ட இடைவெளிக்கு பின்ன ஷிவம் துபேவுக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்க என்ன காரணம்? – விவரம் இதோ

தோனி கடந்த 2006ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 98 போட்டிகளில் விளையாடியிருந்தார். அவரது இந்த சாதனையை அக்சர் படேல் இன்று அதிகாரப்பூர்வமாக தகர்த்து அதிக டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -