நீண்ட இடைவெளிக்கு பின்ன ஷிவம் துபேவுக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்க என்ன காரணம்? – விவரம் இதோ

Shivam Dube
- Advertisement -

இந்திய அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள 3 ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. இதனால் இந்த டி20 தொடரை எந்த அணி கைப்பற்றப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஒருநாள் தொடரில் ஷிவம் துபே இடம்பெற்றது எப்படி? :

அதேபோன்று இந்த டி20 தொடர் முடிந்த கையோடு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட இருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்த ஒருநாள் தொடரில் இருந்து நிதீஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி நிதீஷ் ரெட்டி விலகியதன் காரணமாக டி20 அணியில் விளையாடி வரும் நட்சத்திர அனுபவ ஆல்ரவுண்டரான ஷிவம் துபே ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒருநாள் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

டி20 வீரராக மட்டுமே பார்க்கப்பட்ட ஷிவம் துபேவுக்கு இந்த இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்க என்ன காரணமெனில் : ஏற்கனவே ஹார்டிக் பாண்டியா காயம் அடைந்துள்ள வேளையில் தற்போது நிதீஷ் ரெட்டியும் காயம் அடைந்துள்ளதால் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்கிற காரணத்தினால் இந்த வாய்ப்பு ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. 4 வீரர்களுக்கு முதன் முறையாக அழைப்பு – முழு லிஸ்ட் இதோ

அதுமட்டும் இன்றி இன்னும் ஒருநாள் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் இந்தியாவிலிருந்து ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை தேர்வு செய்து இங்கிலாந்து கொண்டு வருவதை விட ஏற்கனவே டி20 போட்டியில் அங்கு விளையாடி வரும் ஷிவம் துபேவை ஒருநாள் அணியில் சேர்க்கலாம் என அவரை தேர்வு செய்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

Advertisement