எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நாளை டிசம்பர் 20-ஆம் தேதி பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டியானது இன்று டிசம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
சூரியகுமார் யாதவ் ரன்களை குவிக்க வேண்டியது அவசியம் : வருண் ஆரோன்
இந்த தொடரில் ஏற்கனவே இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி நல்ல நம்பிக்கையுடன் அடுத்த தொடருக்கு தயாராகும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில் நாளை வெளியாக இருக்கும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரின் கேப்டனாக சூரியகுமார் யாதவே நியமிக்கப்பட இருப்பதாகவும் ஆனாலும் அவரது பேட்டிங் ஃபார்ம் மீதான சில வருத்தங்களும் நிர்வாகத்தின் மத்தியில் இருப்பதாகவே தெரிகிறது.
இந்நிலையில் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் ரன்களை சேர்க்க வேண்டியது அவசியம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான வருண் ஆரோன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னைப் பொறுத்தவரை சூரியகுமார் யாதவ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும் தற்போதைய நிலையில் அவர் தனது பேட்டிங்கில் ரன்களை குவிக்க வேண்டும்.
ஏனெனில் உலகக்கோப்பை தொடருக்கும் முன்னதாக அவர் பேட்டில் இருந்து ரன்கள் வந்தால் தான் கேப்டனாக செயல்படும்போது அது அவருக்கு கூடுதல் நம்பிக்கையை தரும். ஏற்கனவே சுப்மன் கில் பார்மின்றி தவித்து வருகிறார். இப்படி கேப்டன் மற்றும் துணை கேப்டன் என இருவருமே பேட்டிங் பார்மின்றி தவித்தால் அது இந்திய அணிக்கு சற்று இடையூறாக மாற வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : இதுதான் சூரியகுமார் யாதவுக்கு கேப்டனாக கடைசி தொடர்.. நாளை பி.சி.சி.ஐ வெளியிடவுள்ள – முக்கிய அறிவிப்பு
எனவே தற்போதைக்கு சூரியகுமார் யாதவ் ரன்களை சேர்க்க வேண்டியது அவசியம். மோசமான ஃபார்மில் இருந்து விடுபட்டு அவர் நல்ல பார்முக்கு வரும் பட்சத்தில் அதே நம்பிக்கையுடன் கேப்டனாகவும் சிறப்பாக செயல்படுவார். எனவே தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான கடைசி போட்டியிலும் சரி, அதற்கடுத்து வரும் நியூஸிலாந்து தொடரிலும் சரி அவர் ரன்களை குவிக்க வேண்டியது அவசியம் என வருண் ஆரோன் பேசியது குறிப்பிடத்தக்கது.



