இதுதான் சூரியகுமார் யாதவுக்கு கேப்டனாக கடைசி தொடர்.. நாளை பி.சி.சி.ஐ வெளியிடவுள்ள – முக்கிய அறிவிப்பு

Suryakumar Yadav
- Advertisement -

கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்திருந்தார். இதன் காரணமாக டி20 அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டிய சூழலில் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

கேப்டனாக சூரியகுமார் யாதவின் கடைசி தொடர் :

ஆனால் அப்போது புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கவுதம் கம்பீர் சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக கொண்டு வந்தார். அப்படி சூரியகுமார் யாதவ் டி20 அணியின் புதிய கேப்டனாக மாறியதில் இருந்து இந்திய டி20 அணி தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே பெற்று வருகிறது.

- Advertisement -

இதுவரை எந்த ஒரு டி20 தொடரையும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இழக்காத வேளையில் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது. என்னதான் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் அனைத்து தொடர்களிலும் வெற்றி பெற்று வந்தாலும் தனிப்பட்ட முறையில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

ஏனெனில் அவர் கேப்டனாக தலைமையேற்ற பிறகு இதுவரை அவர் பெரியளவில் சிறப்பான ஆட்டத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த ஓராண்டாகவே ஒரு அரைசதம் கூட அடிக்காமல் விளையாடி வருவதால் அவர் இடத்தின் மீதான கேள்வியும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடர்தான் சூரியகுமார் யாதவுக்கு கேப்டனாக கடைசி தொடர் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நாளை டிசம்பர் 20-ஆம் தேதி அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்றும் அந்த அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவே இருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு தற்போது 35 வயதான சூரியகுமாரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், அவரது பேட்டிங் ஃபார்மை கருத்தில் கொண்டும் கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 356 ரன்ஸ்.. புகார் சொல்லாம மூட்டுகிட்டு இப்படி போடு.. சண்டையிட்ட ஆர்ச்சரை விளாசிய ஸ்டோக்ஸ்

அதேவேளையில் சூரியகுமார் யாதவ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் டி20 அணியின் புதிய கேப்டன் பதவியையும் சுப்மன் கில்லிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிகிறது. அப்படி நடந்தால் மூன்று வகையான இந்திய அணியின் கேப்டனாகவும் சுப்மன் கில் மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement