20 வருஷமா நான் நேசிச்ச விஷயத்தில் இருந்து வெளியேறுகிறன்.. உருக்கமான ஓய்வை அறிவித்த – இந்திய வீரர்

Varun-Aaron
- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமான வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோன் 2015-ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்து 2011-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை 52 போட்டியில் விளையாடிய அவர் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஓய்வை அறிவித்த இந்திய வீரர் :

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் கடைசியாக குஜராத் அணிக்காகவும் விளையாடியிருந்த வருண் ஆரோன் இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 35 வயதான வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி அசத்தக்கூடியவர்.

- Advertisement -

ஆனாலும் அவருக்கு தொடர்ந்து இந்திய அணியின் இடம் கிடைக்காமல் சென்று விட்டது. அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த வேளையில் தற்போது அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது : கடந்த 20 ஆண்டுகளாக நான் வேகப்பந்துவீச்சால் தான் வாழ்ந்து இருக்கிறேன். அதைத்தான் சுவாசித்திருக்கிறேன். அதில் தான் செழித்து இருக்கிறேன். மிகுந்த நன்றியுடனும், மனநிறையுடனும் ஓய்வு பெறுவதை அறிவிக்கிறேன்.

- Advertisement -

எனக்கு ஆதரவளித்த பிசிசிஐ மற்றும் ஜார்கண்ட் மாநில அணி ஆகியவற்றிற்கு நன்றி. அதேபோன்று நான் விளையாடிய வேளைகளில் எனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், சகவீரர்கள், அணி நிர்வாகிகள் ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இதையும் படிங்க : என்னோட கரியரில் நான் இந்திய அணியின் கேப்டனாக செயல்படாதது ஏன்? – விளக்கமளித்த அஷ்வின்

வேகப்பந்து வீச்சு தான் என்னுடைய முதல் காதல். நான் மைதானத்தை விட்டு வெளியேறினாலும் கிரிக்கெட்டின் ஒரு அங்கமாக எப்போதும் தொடருவேன். என்னுடன் இவ்வளவு நாட்கள் பயணித்த எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பயிற்சியாளர்கள், வீரர்கள் என அனைவருக்கும் நன்றி என வருண் ஆரோன் உருக்கத்துடன் அவரது ஓய்வை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement