என்னோட கரியரில் நான் இந்திய அணியின் கேப்டனாக செயல்படாதது ஏன்? – விளக்கமளித்த அஷ்வின்

Ashwin
- Advertisement -

அண்மையில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய அணியானது அதற்கு அடுத்த நான்கு போட்டிகளில் மூன்று தோல்வி மற்றும் ஒரு டிரா என ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் அந்த தொடரை ஆஸ்திரேலிய அணியிடம் இழந்தது.

இந்திய அணியின் கேப்டனாகதது ஏன்? :

அந்த தொடரின் மூன்றாவது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டி மழையால் டிராவானது. அதன்பிறகு சில மணி நேரங்களிலேயே இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் முடிவை அறிவித்து ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இந்திய அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் திடீரென இப்படி ஓய்வு முடிவை அறிவித்தது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் தனது கரியர் முழுவதும் தான் இந்திய அணியின் கேப்டனாக செயல்படாதது ஏன்? என்பது குறித்து விளக்கத்தை தற்போது அஸ்வின் வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆகாததற்கு நான் படித்த இன்ஜினியரிங் தான் காரணம். ஏனெனில் உன்னால் முடியாது என்று யாரேனும் சொன்னால் நான் நிச்சயம் அதனை நோக்கி ஓடி அதனை சாதித்தும் காட்டுவேன். ஆனால் உன்னால் முடியும் என்று சொல்லிவிட்டால் தூங்கி விடுவேன்.

இதையும் படிங்க : கம்பீர் தமக்கு பிடிச்ச வீரர்களை செலக்ட் பன்றாரு.. அதுக்கு இதான் சாட்சி.. ஆதாரத்துடன் மனோஜ் திவாரி விமர்சனம்

அதுபோல தான் நிறைய பேர் என்னை “நீ இந்திய அணியின் கேப்டனாக தகுதியானவன்” என்று ஆதரவு கொடுத்தார்கள். இப்படி என்னால் இந்திய அணியின் கேப்டனாக முடியும் என்று பலரும் சொன்னதாலேயே நான் தூங்கிவிட்டேன் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement