- Advertisement -
பொழுதுபோக்கு

விஜயோடு வனிதா விஜயகுமார் நடித்த படம் பற்றி தெரியுமா ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அனைவரின் கண்களுக்கும் சொர்ணாக்காவாக தெரிந்து வருவது பிரபல நடிகையான வனிதா விஜயகுமார் தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் வனிதா.

கடந்த 1995 ஆம் ஆண்டு நம்பிராஜன் இயக்கத்தில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் வனிதா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இளைய தளபதி விஜயின் ஜோடியாக நடித்திருந்தார் வனிதா இந்த படத்திற்கு பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார் வனிதா.

- Advertisement -

சந்திரலேகா படத்திற்கு பின்னர் மாணிக்கம் என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு என்று ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். பின்னர் வனிதா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர முடியாத நிலை வந்தது தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே கதாநாயகியாக நடித்திருந்தார்.

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு 2013 ஆம் ஆண்டு நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பின்னர் 2015ஆம் ஆண்டு எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தையும் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by