பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக ராஜஸ்தான் அணியில் இணைந்த அதிரடி வீரர் – உறுதி செய்த அணி நிர்வாகம்

Stokes
- Advertisement -

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் முக்கியமான பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சரும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலக, கொரானா தொற்றை காரணம் காட்டி தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி விட்டனர் அந்த அணியின் மற்ற வீரர்களான ஆண்ட்ரு டை மற்றும் லியாம் லிவிங்ஸ்டன்.

morris 1

- Advertisement -

இதனால் போதிய வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் தவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டேவிட் மில்லர், முஷ்டஃபிசுர் ரஹ்மான், கிறிஸ் மோரிஸ், ஜோஸ் பட்லர் ஆகியோரை மட்டுமே வைத்து விளையாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நான்கு வீரர்களில் யாரேனும் ஒருவருக்கு விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், மாற்று வெளிநாட்டு வீரர் இல்லாததால் இந்திய வீரர்களை வைத்தே ஆட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது அந்த அணி. இந்த சூழ்திலையில் இருந்து தப்பிக்க மற்ற அணிகளிடம் இருந்து வெளிநாட்டு வீரர்களை தங்களது அணிக்கு தருமாறு கேட்டிருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

vander

இதற்கிடையில் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய அந்த அணியின் வீரரான பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக அணியில் இணைந்துள்ளார் தென் ஆப்ரிக்காவின் அதிரடி வீரரான வான்டர் டூசன். விசா கிடைக்காத காரணத்தால் அவர் இந்தியா வருவதில் சிக்கல் இருந்து வந்தது. இதற்கிடையில் விசா பிரச்சனை முடிந்து இந்தியா வந்துள்ள வான்டர் டூசன் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் உள்ளார்.

vander 1

7 நாட்கள் முடிந்ததும் அவர் அணியுடன் இணைவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதுவரை 126 t20 போட்டிகளில் விளையாடியுள்ள வான்டர் டூசன் 3824 ரன்களை அடித்துள்ளார். அதில் 26 அரைசதங்கள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement