ஒருவழியா ராஜஸ்தான் அணிக்கு வந்த நற்செய்தி. அணிக்குள் இணைய இருக்கும் அதிரடி வீரர் – விவரம் இதோ

RR

நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் பரிதாபத்திற்குரிய அணி என்றால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான். நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று மீதி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இனி வரும் போட்டிகளில் நிச்சயமாக நன்றாக விளையாடும் என்று எதிர்பார்த்தால் அது அங்கும் அதற்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

csk vs rr

அணியின் நம்பிக்கை பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் கையில் காயம் ஏற்பட்ட காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இங்கிலாந்திற்கு சென்று விட்டார். லியம் லிவிங்ஸ்டன் கொரனோ பாதுகாப்பு வளையத்தில் தங்க முடியாமல் அவரும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இங்கிலாந்துக்குச் சென்று விட்டார். விரலில் காயம் உள்ளதால் சிகிச்சை பெற்ற பின்னர் நிச்சயமாக மீண்டுவந்து ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் ஆர்ச்சரும் தற்பொழுது ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறுகிறேன் என்று அறிவித்துள்ளார்.

இவ்வாறு அடுத்தடுத்து மூன்று இங்கிலாந்து வீரர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறியது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதை சரி செய்யும் பொருட்டு அந்த அணி ஒரு தகுந்த மாற்று வீரரை தேடி வந்தது. அதன் படி தென் ஆப்பிரிக்க வீரர் வாண்டர்டசனை மாற்று வீரராக களமிறக்க உள்ளது

vander

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்காக சமீபகாலங்களில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிக அதிரடியாக விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் அடித்து அசத்தினார் மட்டுமல்லாமல் மொத்தமாக 183 ரன்களை குவித்துள்ளார். அதேபோல இரண்டில் ஒன்றை போட்டிகளில் 86 ரன்கள் அடித்து பாகிஸ்தான் அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தினர்.

- Advertisement -

vander 1

வாண்டர்டசன் இதுவரை தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆக 19 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தமாக 628 ரன்கள் குவித்துள்ளார். டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில் அவரது ஆவரேஜ் நாற்பத்தி 41.87 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 138.63 ஆகும். நிச்சயமாக அவர் ராஜஸ்தான் அணிக்கு பலம் சேர்ப்பார் என்று அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் அவரது வருகைக்கு எதிர்பார்த்து வருகின்றனர்.