- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதைமட்டும் பண்ணா போதும்.. இன்னும் 2 வருஷத்துல வைபவ் இந்திய அணிக்காக ஆடுவாரு – கோச் நம்பிக்கை

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு புதுமுக வீரர்கள் இடம் பெற்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வேளையில் அவர்களுக்கு மத்தியில் 14 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சீசனிலேயே மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இன்னும் 2 ஆண்டுகளில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக விளையாடுவார் :

அந்த வகையில் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 252 ரன்களை குவித்து மிரட்டியுள்ளார். அவரது மிரட்டலான சிக்ஸ ஹிட்டிங் பவர் அவரை ஒரே இரவில் ஹீரோவாகவும் மாற்றியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து அசத்திய அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் அரைசதம் அடித்து பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இப்படி மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடுவார் என வைபவ் சூரியவன்ஷியின் பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : வைபவ் சூர்யவன்ஷியை நான் மிகவும் இளம் வயதிலிருந்து பார்த்து வருகிறேன். தற்போது குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்த அவர் சென்னை அணிக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதோடு ராகுல் டிராவிட், விக்ரம் ரத்தோர் போன்றவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நிச்சயம் வரும் ஆண்டுகளில் அவரது பேட்டிங் திறனை கூட்டுவார் என்று நம்புகிறேன். தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி முடித்துள்ள அவர் இனிவரும் ஒரு சில மாதங்களில் தொடர்ந்து வெள்ளை பயிற்சியில் தீவிரமாக பயிற்சி செய்ய உள்ளார். என்னை பொருத்தவரை வைபவ் சூரியவன்ஷிக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் அவர் “பிட்னஸ் மற்றும் பீல்டிங்”கில் இன்னும் முன்னேற்றம் காணும் பட்சத்தில் நிச்சயம் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார் அவரது இந்த பார்மை பி.சி.சி.ஐ-யும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்று தான் நம்புவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கேப்டனாக இல்லாத போதும் பட் கமின்ஸ் போல.. ரஜத் படிதாருக்கு அபராதம் விதித்த பிசிசிஐ.. காரணம் என்ன?

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார் அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு நடைபெறும் 19 வயத்துக்குட்பட்டோர் உலகக்கோப்பை அணியிலும் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -