இந்த 2026 ஐ.பி.எல் சீசனில் நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான் – வைபவ் சூர்யவன்ஷி பேட்டி

Vaibhav Sooryavanshi
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூரியவன்ஷிக்கு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது ஒரு மறக்க முடியாத சீசனாக மாறியுள்ளது. ஏனெனில் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி பல்வேறு விருதுகளை வென்று குவித்தார். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு அதிக ரன்களை அடித்த வீரராகவும் 750-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

இந்தாண்டு நான் கற்றுக்கொண்டது இதுதான் : வைபவ் சூர்யவன்ஷி

அதோடு இந்த ஆண்டு அதிக சிக்ஸர்களை அடித்த வீரராகவும், அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய வீரராகவும், மிகவும் மதிப்பு மிக்க வீரராகவும், சிறந்த இளம் வீரராகவும் விருதுகளை வாரி குவித்து இருந்தார். இப்படி 15 வயதிலேயே ஒரு இளம் வீரர் 5 முக்கிய தனிநபர் விருதுகளை ஐ.பி.எல் தொடரில் வென்றது இதுவே முதல்முறை என்கிற பெருமையும் பெற்றுள்ளார்.

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாகவும் பார்க்கப்படுகிறார். இவ்வேளையில் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடியது குறித்து பேசிய வைபவ் சூர்யவன்சி கூறியதாவது : தற்போது நான் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தாலும் ஒரு அழுத்தத்தில் இருக்கிறேன். இனிவரும் காலங்களில் அழுத்தத்திலிருந்து விடுபட்டு விளையாட கற்றுக் கொள்வேன்.

அடுத்த சீசனிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். எனக்கு சாதகமான இடத்திற்கு பந்து வந்தால் முதல் பந்தாக இருந்தாலும் அதை அடிக்க முயற்சிப்பேன். அதுதான் என்னுடைய ஆட்டமுறை. ஆனால் இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடியதிலிருந்து நான் கற்றுக்கொண்ட முதன்மையான பாடம் யாதெனில் : அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி விளையாட வேண்டும் என்றும் ஒவ்வொரு போட்டியிலும் சூழலுக்கு ஏற்ப, அணியின் நிலைமைக்கு ஏற்றவாரும் விளையாட கற்றுக்கொண்டேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணியின் வெற்றி ஊர்வலம் இந்தாண்டு நடைபெறாது.. நிர்வாகம் அறிவிப்பு – காரணம் என்ன?

மேலும் போட்டிக்கு ஏற்ப எனது அணுகுமுறையை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதையும் இந்த ஆண்டு கற்றுக் கொண்டேன். எல்லா போட்டிகளிலும் ஒரே விதமாக விளையாட முடியாது. போட்டியின் சூழலுக்கு ஏற்ப அதனை புரிந்து கொண்டு தேவைக்கேற்ப விளையாட வேண்டும் என்பதையும் நான் இந்த சீசனில் கற்றுக் கொண்டேன் என வைபவ் சூர்யவன்ஷி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement