இந்தியாவில் சயீத் முஸ்டாக் அலி டி20 கோப்பை 2025 தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் டிசம்பர் 2ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற எலைட் குரூப் சி பிரிவின் லீக் போட்டியில் பீகார் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
களமிறங்கிய பீகாருக்கு நம்பிக்கை நட்சத்திரம் வைபவ் சூரியவன்சி அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் தடுமாறிய பிபின் சவுரப் 4 (4) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த பியூஸ் சிங் 7 ரன்னில் அவுட்டாகி பெரிய அழுத்தத்தை உண்டாக்கினார். அதனால் மறுபுறம் சூரியவன்சி கொஞ்சம் நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சூர்யவன்சி அசத்தல்:
அவருக்கு எதிர்ப்புறம் வந்த ஆகாஷ் ராஜ் மெதுவாக விளையாடி கை கொடுத்தார். அதைப் பயன்படுத்திய சூரியவன்சி அரை சதமடித்து பீகார் அணிக்கு ரன் குவிப்பில் ஈடுபட்டார். 3வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் அந்த ஜோடியில் கடைசி வரை மெதுவாகவே விளையாடிய ஆகாஷ் ராஜ் 26 (30) ரன்னில் நடையைக் கட்டினார்.
அடுத்து வந்த ஆயுஸ் லோகருக்கா அதிரடியாக 25* (17) ரன்கள் எடுத்து அசத்தினார். மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் 7 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதத்தை அடித்த சூர்யவன்சி 108* (61) ரன்களை 177.05 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவரில் பீகார் 176/3 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மகாராஷ்டிராவுக்கு பிரிதிவி ஷா அதிரடியாக விளையாடினார்.
வரலாற்று சாதனை:
எதிர்ப்புறம் அர்சின் குல்கர்னி 1, மந்தர் பண்டாரி 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். ஆனால் மறுபுறம் சிறப்பாக விளையாடிய பிரிதிவி ஷா 11 பவுண்டரி 7 சிக்ஸருடன் அரை சதத்தை அடித்து 66 (30) ரன்கள் குவித்து அசத்தினார். மிடில் ஆடரில் நீரஜ் ஜோசி 30, ரஞ்சீத் நிக்காம் 27, நிகில் நாயக் 22, யோகேஷ் டோங்ரி 14, விக்கி ஓஸ்ட்வால் 3*, ஜலஜ் சக்சேனா 8* ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க: இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் ஹார்டிக் பாண்டியா.. எப்போது தெரியுமா? – வெளியான தகவல்
அதனால் 19.1 ஓவரில் 182/7 ரன்களை எடுத்த மகாராஷ்டிரா போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பீகாருக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷாகிபுல் கானி, முகமது விசார் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் இப்போட்டியின் வாயிலாக சயீத் முஸ்டாக் அலி டி20 கோப்பையில் மிகவும் வயதில் சதமடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை சூரியவன்சி படைத்தார். அந்தப் பட்டியல்:
1. வைபவ் சூர்யவன்சி: 108*, 14 வருடம் 250 நாட்கள், மகாராஷ்டிராவுக்கு எதிராக, 2025*
2. விஜய் ஜோல்: 109, 18 வருடம் 135 நாட்கள், மும்பைக்கு எதிராக, 2013



