இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் ஹார்டிக் பாண்டியா.. எப்போது தெரியுமா? – வெளியான தகவல்

Hardik Pandya
- Advertisement -

அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா கடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரின் பாதியிலேயே வெளியேறினார். அதன் பின்னர் எவ்வித போட்டிகளிலும் விளையாடாத அவர் பெங்களூரு சென்று பயிற்சி மற்றும் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நவம்பர் 30-ஆம் தேதியுடன் அவரது சிகிச்சை மற்றும் பயிற்சிகள் முடிவடைந்த வேளையில் அவர் பெங்களூருவில் இருந்து வெளியேறினார்.

ஹார்டிக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்புவது உறுதி :

ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஹார்டிக் பாண்டியா கிரிக்கெட் களத்திற்கு திரும்புவது தற்போது உறுதியாகி உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி தொடரில் பரோடா அணிக்காக களமிறங்குவது உறுதி என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் பி.சி.சி.ஐ சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் : ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்த ஹார்டிக் பாண்டியா கடந்த அக்டோபர் 21-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் மையத்தை விட்டு வெளியே வரவில்லை. அங்கு தங்கியிருந்த படியே சிகிச்சைகளை மேற்கொண்டார்.

பின்னர் தற்போது அனைத்து விதமான சிகிச்சையும், பயிற்சியையும் முடித்துக்கொண்ட அவர் மீண்டும் பேட்டிங் செய்யும் அளவிற்கும், பந்துவீசும் அளவிற்கும் முழு உடற்தகுதியை பெற்றுள்ளார். எனவே டிசம்பர் நான்காம் தேதி குஜராத் அணிக்கு எதிராகவும், டிசம்பர் 6-ஆம் தேதி ஹரியானா அணிக்கு எதிராகவும் சையத் முஷ்டாக் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் அவர் சையத் முஷ்டாக் அலி தொடரில் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறார். அதுமட்டுமின்றி டிசம்பர் 9-ஆம் தேதி துவங்க இருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் இந்திய அணிக்காகவும் அவர் திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கம்பீருக்கு இப்படி இருந்தா பிடிக்காது.. என்னை பொறுத்தவரை அவர் பெஸ்ட் கோச் – ரஹ்மனுல்லா குர்பாஸ் பேட்டி

இன்று டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி தொடரின் போட்டியில் பரோடா அணிக்காக விளையாடிய ஹார்டிக் பாண்டியா 42 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 77 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அவரது அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்று ஆட்டநாயகன் விருதினை வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement