20 ஓவர்களில் 297 ரன்கள்.. யு.ஏ.இ டீமை வச்சி செய்து சாதனை சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி – விவரம் இதோ

Vaibhav Suryavanshi
- Advertisement -

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 கிரிக்கெட் தொடரானது கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா ஏ மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இன்று நவம்பர் 14-ஆம் தேதி தோஹா நகரில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச மைதானத்தில் நாட்டில் நடைபெற்று வருகிறது.

யு.ஏ.இ அணியை வெளுத்து வாங்கிய வைபவ் சூர்யவன்ஷி :

அதன்படி இன்று நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய ஏ அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய ஏ அணியானது ஐக்கிய அரபு அமீரக பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை அடித்து நொறுக்கி அதிரடியான ஆட்டத்தை முதல் பந்து முதல் கடைசி பந்து வரை வெளிப்படுத்தியது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய ஏ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 144 ரன்களையும், கேப்டன் ஜிதேஷ் சர்மா 83 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர்.

பின்னர் 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐக்கிய அரபு அமீரக அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய ஏ அணி சார்பாக விளையாடிய 14 வயது இளம் துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்சி 42 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 15 சிக்ஸர்கள் என 144 ரன்கள் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

- Advertisement -

ஏற்கனவே இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிக இளம் வயதில் அறிமுகமான சூர்யவன்ஷி சிக்ஸர் அடித்தே தனது ரன் கணக்கை துவங்கியிருந்தார். அதுமட்டுமின்றி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 36 பந்துகளில் அதிரடியான சதம் அடித்தும் சாதனை நிகழ்த்தியிருந்தார்.

இதையும் படிங்க : டெல்லி அணியின் முதுகெலும்பே அவர்தான்.. அவர் அந்த டீமில் இருந்து வெளியேற மாட்டார் – சுரேஷ் ரெய்னா கருத்து

இந்நிலையில் இன்று ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இந்திய ஏ அணியின் துவக்க வீரராக 17 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்த அவர் 32 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். மிகவும் இளம் வீரரான இவர் தொடர்ச்சியாக இப்படி தனது பேட்டிங்கில் அதிரடி காட்டி வருவதால் நிச்சயம் அவர் வெகு விரைவில் இந்திய அணிக்காகவும் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாக வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Advertisement