இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக அறிமுகமான 14 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி மிக இளம் வயதிலேயே ஐபிஎல் தொடரில் அறிமுகமானது மட்டுமின்றி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை நிகழ்த்தினார்.
பயிற்சி போட்டியில் அசத்திய வைபவ் சூர்யவன்ஷி :
அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இனிவரும் காலத்தில் அவர் மிகப்பெரிய வீரராக மாறுவார் என்றும் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த 2025 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய அவர் 200 ஸ்டைக் ரேட்டில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 242 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
இதன் காரணமாக இனிவரும் தொடர்களில் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்கிற எதிர்பார்ப்பும் அவர்மீது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ஜூன் 27-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
இதன்காரணமாக அங்கு சென்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாட இருக்கிறார். இவ்வேளையில் அதற்கு முன்னதாக தற்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் பயிற்சி போட்டியில் மிரட்டலான ஆட்டம் ஒன்றினை வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த வகையில் தேசிய கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அண்டர் 19 அணியின் துவக்க வீரராக களமிறங்கிய அவர் 90 பந்துகளில் 190 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க : இந்த அழைப்பு ரொம்ப ஸ்பெஷலானது.. இதுல நீங்க சாதிச்சி காட்டனும் – சாய் சுதர்சன் குறித்து பேசிய கம்பீர்
அவரது இந்த ஆட்டத்தை வீடியோவாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் பகிர்ந்துள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ஜாம்பவானாக மாறப்போகிறார் என வைபவ் சூரியவன்ஷியை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.



