இந்த அழைப்பு ரொம்ப ஸ்பெஷலானது.. இதுல நீங்க சாதிச்சி காட்டனும் – சாய் சுதர்சன் குறித்து பேசிய கம்பீர்

Sai Sudharsan
- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 700 ரன்களுக்கு மேல் குவித்து இந்த ஆண்டு அதிக ரன்களை அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என்று பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வந்தனர்.

இந்திய அணிக்கு சாய் சுதர்சனை வரவேற்ற கவுதம் கம்பீர் :

அதேபோன்று ஏற்கனவே அவர் தமிழ்நாடு அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இருந்து முதல் முறையாக அழைப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

அந்தவகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவதற்காக தற்போது இங்கிலாந்து சென்றுள்ள சாய் சுதர்சன் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பினை பெற்றுள்ள சாய் சுதர்சனை பாராட்டி இந்திய அணியின் மீட்டிங்கில் பயிற்சியாளர் கம்பீர் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் கம்பீர் கூறியதாவது : முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டது உண்மையிலேயே ஒரு ஸ்பெஷலான தருணமாக சாய் சுதர்சனுக்கு இருக்கும்.

- Advertisement -

எனவே அவரை இந்திய டெஸ்ட் அணிக்கு நான் வரவேற்கிறேன். அதேபோன்று கடந்த மூன்று மாதங்களாக உங்களுடைய ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி மிகச்சிறந்த வீரராக மாறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கம்பீர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பும்ராவின் ரெக்கார்டை காலி செய்த காகிஸோ ரபாடா – விவரம் இதோ

மேலும் முதல் முறையாக டெஸ்ட் வாய்ப்பினை பெற்ற அர்ஷ்தீப் சிங் குறித்து பேசிய அவர் கூறுகையில் : வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். எனவே நிச்சயம் சிவப்பு பந்து கிரிக்கெட்டிலும் பலமான வீரராக வலம் வருவீர்கள் என்று தான் நம்புவதாக கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement