11 சிக்ஸ் 35 பந்தில் 100.. யூசுப் பதானை முந்திய 14 வயது சூர்யவன்சி 3 உலக சாதனையுடன்.. 6 ஐபிஎல் வரலாற்று சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2025 தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 47வது போட்டியில் குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் குஜராத் நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் 15.5 ஓவரில் தொட்ட மிரட்டலான வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு 14 வயதில் 7 பவுண்டரி 11 சிக்சர்களை அடித்து 101 (38) ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய வைபவ் சூர்யவன்சி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்தப் பதிவில் அவர் படைத்த சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.
1. முதலில் 14 வருடம் 32 வயதில் 100 ரன்கள் தொட்ட அவர் டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் மும்பைக்கு எதிராக 2013ஆம் ஆண்டு உள்ளூர் தொடரில் மகாராஷ்டிராவின் விஜய் ஜோல் 18 வருடம் 118 நாட்களில் சதத்தை அடித்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

சூர்யவன்சியின் சாதனைகள்:

2. டி20 கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் அரை சதத்தை அடித்த வீரர் என்று உலக சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் ஆப்கானிஸ்தானின் முகமது நபி மகன் ஹசன் ஐசக்கில் 2022ஆம் ஆண்டு 15 வருடம் 360 நாளில் அரை சதத்தை அடித்ததே முந்தைய சாதனை.
3. இந்தப் போட்டியில் அடித்த 101 ரன்களில் 93.06% ரன்களை அதாவது 94 ரன்களை சூரியவன்சி பௌண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் மட்டுமே அடித்துள்ளார்.

அதன் வாயிலாக ஒரு டி20 போட்டியில் பௌண்டரிகளால் மட்டுமே அதிக சதவீத ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2024ஆம் ஆண்டு மேகாலயாவுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா 92.45% ரன்களை பௌண்டரிகளால் அடித்ததே முந்தைய சாதனை.
4. ஐபிஎல் தொடரில் இளம் வயதில் அரை சதம் மற்றும் சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற இரட்டை வரலாற்று சாதனைகளையும் சூரியவன்சி படைத்துள்ளார்.

- Advertisement -

வரலாற்று சாதனைகள்:

இதற்கு முன் ரியான் பராக் (17 வருடம் 175 நாட்களில் அரை சதம்), மனிஷ் பாண்டே (19 வருடம் 253 நாட்களில் சதம்) அந்த சாதனைகளை வைத்திருந்தார்கள்.
5. 35 பந்துகளில் சதத்தை அடித்த சூர்யவன்சி ஐபிஎல் வரலாற்றில் வேகமாக சதத்தை அடித்த இந்திய வீரர் சரித்திரத்தையும் படைத்துள்ளார். இதற்கு முன் 2010இல் மும்பைக்கு எதிராக ராஜஸ்தானுக்காக யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்ததே முந்தைய சாதனை.

ஒட்டுமொத்தமாக கிறிஸ் கெய்லுக்கு (30 பந்துகளில் 100 ரன்கள்) பின் 2வது வேகமான ஐபிஎல் சதத்தை அடித்த வீரராகவும் சூரியவன்சி சாதனை படைத்துள்ளார்.
6. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் முஜீப் உர் ரஹ்மான் 17 வருடம் 39 நாட்களில் ஆட்டநாயகன் விருதை வென்றதே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: பவர்பிளே ஓவர்லயே எல்லாம் முடிஞ்சி போச்சு.. ராஜஸ்தான் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – சுப்மன் கில் வருத்தம்

7. ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக (11) சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2010இல் ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே அணிக்காக முரளி விஜயையும் 11 சிக்சர்கள் அடித்துள்ளார். இது போக குறைந்த (3) போட்டிகளில் ஐபிஎல் சதத்தை அடித்த இந்திய வீரராகவும் சூரியவன்சி சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சேசிங்கில் வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Advertisement