ஜெய்ஸ்வால் தான் இதை சொன்னாரு.. எனக்கு பயமில்ல.. 14 வயதில் சதமடித்தது பற்றி ஆட்டநாயகன் சூர்யவன்சி பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2025 தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 47வது போட்டியில் குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 39, கேப்டன் கில் 84, ஜோஸ் பட்லர் 50* ரன்கள் எடுத்தார்.

அதைத் துரத்திய ராஜஸ்தான் அணிக்கு 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி பவுலர்களை அடித்து நொறுக்கி 17 பந்தில் அரை சதத்தை அடித்தார். தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் 35 பந்தில் சதத்தை அடித்து 7 பவுண்டரி 11 சிக்ஸர்களை பறக்க விட்டு 101 (38) ரன்னில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் தம்முடைய பங்கிற்கு 70* (40) ரன்கள் விளாசி அசத்தினார்.

- Advertisement -

14 வயது ஆட்டநாயகன்:

இறுதியில் ரியான் பராக் 32* (15) ரன்கள் எடுத்ததால் ஓவரிலேயே 15.5 ரன்களை எடுத்த ராஜஸ்தான் ஐபிஎல் தொடரில் மிகவும் குறைந்த ஓவரில் 200+ இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக சாதனை படைத்தது. அத்துடன் தங்களது 3வது வெற்றியைப் பெற்ற ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சூரியவன்சி சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் 14 வயது மட்டுமே நிரந்தியிருந்தாலும் தமக்கு எந்த பயமும் கிடையாது என்று கூறும் அவர் 3வது ஐபிஎல் போட்டியிலேயே முதல் சதத்தை அடித்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு எதிர்புறம் ஜெய்ஸ்வால் தொடர்ந்து ஆலோசனைகளும் தன்னம்பிக்கைகளும் கொடுத்ததாகவும் சூரியவன்சி தெரிவித்துள்ளார். மேலும் 3 – 4 மாதங்களாக ஐபிஎல் தொடருக்காக கடினமாக உழைத்தது சதத்தை அடிக்க காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

எனக்கு பயமில்ல:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மிகவும் நன்றாக உணர்கிறேன். இது என்னுடைய முதல் ஐபிஎல் சதம். அது என்னுடைய 3வது ஐபிஎல் போட்டியிலேயே வந்துள்ளது. இதற்காக கடந்த 3 – 4 மாதங்களாக நான் பயிற்சிகளை எடுத்து வந்தேன். அதற்கான முடிவுகள் தான் தற்போது காண்பிக்கப்பட்டுள்ளது. நான் மைதானத்தை அதிகமாக பார்க்காமல் பந்தில் கவனம் செலுத்தினேன்”

இதையும் படிங்க: 15.5 ஓவரில் 212 ரன்ஸ்.. குஜராத்தை சூறையாடிய 14 வயது சூர்யவன்சி உலக சாதனை.. ராஜஸ்தான் சரித்திர வெற்றி

“ஜெய்ஸ்வாலுடன் பேட்டிங் செய்தது எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்தது. ஏனெனில் என்னை நேர்மறையாக வைத்திருந்த அவர் தொடர்ந்து ஆலோசனைகளைக் கொடுத்தார். அவருடன் பேட்டிங் செய்தது எளிதாக இருந்தது. ஐபிஎல் தொடரில் சதத்தை அடித்தது கனவு போல இருக்கிறது. எனக்கு எந்த பயமும் கிடையாது. பவுலர்கள் என்னை டார்கெட் செய்வார்கள் என்பது பற்றி நான் சிந்திக்கவில்லை. விளையாட்டில் கவனம் செலுத்துகிறேன்” என்று கூறினார்.

Advertisement