100 கிலோமீட்டர் பயணம்.. 4 ஆண்டு தொடர்ந்த முயற்சி.. வைபவ் சூர்யவன்ஷிக்காக – அவரது அப்பா எடுத்த ரிஸ்க்

Vaibhav Suryavanshi
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று துவக்க வீரராக 14 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைத்தது. வெறும் 14 வயதான அவர் எவ்வாறு இவ்வளவு பெரிய தொடரில் அதுவும் சர்வதேச வீரர்களுக்கு மத்தியில் விளையாடப் போகிறார் என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து மிரட்டிய வைபவ் சூரியவன்ஷி முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் வியக்க வைத்தார். அதன்பிறகு தனது இரண்டாவது ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடிய சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

வைபவ் சூர்யவன்ஷிக்காக அவரது குடும்பம் செய்த தியாகம் :

இந்நிலையில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற 47-வது லீக் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 35 பந்துகளிலேயே சதம் அடித்து 14 வயதில் தனது ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருந்தார். மேலும் கிரிஸ் கெயிலுக்கு அடுத்து ஐபிஎல் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும், இந்திய வீரராக ஒரு போட்டியில் அதிக சிக்சர்களை அடித்த வீரராக முரளி விஜய்யின் சாதனையும் சமன் செய்தார். அதுமட்டும் இன்றி ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்திய சூர்யவன்ஷி இனி இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

அதோடு அவரின் இந்த ஆட்டத்தை பார்த்த முன்னாள் வீரர்கள் பலரும் அவர் இந்திய அணிக்காக பல அற்புதங்களை நிகழ்த்த காத்திருக்கிறார் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் 14 வயதான சூரியவன்ஷி இந்த இடத்தை எட்டுவதற்காக பல்வேறு கடினமான சூழல்களை அவர்களது குடும்பத்துடன் சேர்ந்து கடந்து வந்துள்ளது குறித்த சில தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்த வைபவ் சூர்யவன்ஷி மிக இளம் வயதிலேயே கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்ள துவங்கி விட்டார். சூர்யவன்ஷியின் தந்தை அவரை எப்படியாவது கிரிக்கெட் வீரராக மாற்ற வேண்டும் என்று தனது விவசாய நிலத்தை விற்று அவரை மிக இளம் வயதிலேயே கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். அதன் காரணமாக 9 வயது முதலே சூர்யவன்ஷி முறையான கிரிக்கெட் பயிற்சிகளை எடுத்து வருகிறார். ஒரு கட்டத்தில் தனது மகனை மிகப்பெரிய வீரராக மாற்ற வேண்டும் என்று நினைத்த அவரது தந்தை தனது வேலையையும் விட்டுவிட்டு பீகாரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாட்னாவிற்கு தினமும் மூன்று மணி நேரம் பயணம் செய்து தனது மகனை பயிற்சிக்கு அழைத்துச் செல்வாராம்.

- Advertisement -

ஏனெனில் தான் ஒரு பெரிய கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசை அவரது தந்தைக்கு இருந்தது. ஆனால் தன்னால் முடியாத அந்த லட்சியத்தை தனது மகனாவது நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு முயற்சிகளை அவர் எடுத்துள்ளார். அதுமட்டும் இன்றி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து 100 கிலோமீட்டர் தனது மகனை அழைத்துச் சென்று வந்துள்ள அவர் தினமும் காலை ஏழு முப்பது மணியிலிருந்து மாலை வரை காத்திருந்து அழைத்துச்செல்வாரம்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் சன் ரைசர்ஸ் அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் – விவரம் இதோ

இதன் காரணமாக சூர்யவன்ஷியின் மூத்த சகோதரர் தான் வேலைக்கு சென்று குடும்பச் செலவுகளை பார்த்துள்ளார். அவரது தாயாரும் அவருக்கு உறுதுணையாக நின்று பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இப்படி ஒரு குடும்பமே எடுத்த முயற்சியால் தான் வைபவ் சூர்யவன்ஷி இன்று 14 வயதிலேயே கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement