63 பந்தில் 100.. ஏமாற்றத்தில் முகத்தை மூடிக்கொண்ட சூர்யவன்சி.. சிரித்த அம்பயர்.. புஸ்பா ஸ்டைலில் கொண்டாட்டம்

Vaibhav Suryavanshi
- Advertisement -

ஐசிசி 2026 அண்டர்19 உலகக் கோப்பை விரைவில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடைபெற உள்ளது. அந்தத் தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்தியா அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது.

கடைசிப் போட்டி ஜனவரி 7ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1:00 மணிக்கு பேனோனி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தெனாப்பிரிக்கா அண்டர்-19 அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதைப் பார்த்த இந்திய கேப்டன் வைபவ சூரியவன்சி ஏமாற்றத்தால் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டார்.

- Advertisement -

சிரித்த அம்பயர்:

அதாவது இந்திய கேப்டன் ஆயுஸ் மாத்ரே காயத்தால் இத்தொடரில் விளையாடவில்லை. அதனால் 14 வயதாகும் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வரும் சூரியவன்சிக்கு இத்தொடரில் தற்காலிகமாக இந்தியாவை தலைமைத் தாங்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் முதல் 2 போட்டிகளிலும் டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்த அவர் இப்போட்டியிலாவது வெல்வோமா என்று எதிர்பார்த்ததாக தெரிகிறது.

இருப்பினும் இன்றும் டாஸ் தோற்றதால் ஏமாற்றத்தில் முகத்தை மூடிக்கொண்ட அவருடைய ரியாக்சனை பார்த்து அருகில் இருந்த தென்னாபிரிக்க அம்பயர் சிரித்தார். அந்த சூழ்நிலையில் ஆட்டத்தை துவங்கிய இந்தியாவுக்கு ஆரோன் ஜார்ஜ் நிதானமாக விளையாடினார். மறுபுறம் தம்முடைய ஸ்டைலில் வைபவ் சூர்யவன்சி அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார்.

- Advertisement -

புஷ்பா ஸ்டைலில் கொண்டாட்டம்:

அவருடன் சேர்ந்து விளையாடிய ஜார்ஜும் அரை சதமடித்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல தென்னாப்பிரிக்க பவுலர்களை பந்தாடிய அந்த ஜோடியில் வெறும் 63 சதமடித்த சூரியவன்சி அதை பிரபலமான புஷ்பா திரைப்பட கேரக்டர் ஸ்டைலில் கொண்டாடினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 9 பவுண்டரி 10 சிக்ஸருடன் 127 (74) ரன்களை விளாசி அவுட்டானார்.

மறுபுறம் அவருடன் இணைந்து 227 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த ஆரோன் ஜார்ஜ் தம்முடைய பங்கிற்கு கிளாஸ் சதத்தை அடித்து 118 (106) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். மிடில் ஆர்டரில் வேதாந்த் திரிவேதி 34, அபிஞான் குண்டு 21, ஹர்வன்ஸ் பங்காலியா 2, அம்ரிஷ் 8, கனிஷ்க் சௌகான் 10 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.

இதையும் படிங்க: அபிஷேக் சர்மாவை விட சுப்மன் கில் இந்த விடயத்தில் ஒரு படி மேலதான் இருக்கார் – யுவ்ராஜ் சிங் பாராட்டு

இருப்பினும் கடைசியில் முகமது இனான் 28* (19), ஹெனில் பட்டேல் 19* (21) ரன்கள் நேத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்திய அண்டர்-19 அணி 393/7 ரன்கள் குவித்து அசத்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக தாண்டோ சோனி 3, ஜேசன் ரௌல்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement