
அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரினை ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணியானது கைப்பற்றி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே எந்த ஒரு போட்டியையும் இழக்காமல் இறுதிவரை முன்னேறிய இந்திய அணி இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.
அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த 2026-ஆம் ஆண்டிற்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்து ஒரு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது இந்த இறுதிப்போட்டியில் அவர் அடித்த 175 ரன்கள் மூலம் அவர் ஆடம் கில்கிறிஸ்டின் மாபெரும் சாதனை ஒன்றிணையும் தகர்த்து வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். ஐசிசி வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் ஆடவர் போட்டிகளில் இறுதிப்போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரராக ஆடம் கில்கிறிஸ்ட் (149 ரன்கள் 2007 உலக கோப்பை) இருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தகர்த்துள்ளார்.
ஆடவர் உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாகவே மகளிர் அணி சார்பாக அலீசா ஹீலி 170 ரன்கள் அடித்திருந்த வேளையில் அவரது சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி பின்னுக்கு தள்ளியுள்ளார். அதுமட்டும் இன்றி ஒரே இன்னிங்ஸில் 15 சிக்ஸர்களையும் இறுதி போட்டியில் விளாசியது இவர்தான் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : டி20 போட்டிகளில் ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனையை நெருங்கும் முகமது வாசீம் – விவரம் இதோ
இப்படி 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்சி இந்த தொடர் முழுவதுமே 439 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார். இதன் காரணமாக வெகு விரைவாக அவரை முதன்மை இந்திய அணிக்கு கொண்டு வர வேண்டும் என்று பலரும் தங்களது விருப்பங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.