டி20 போட்டிகளில் ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனையை நெருங்கும் முகமது வாசீம் – விவரம் இதோ

Muhammad Waseem
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியும், நியூசிலாந்து அணியும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ரோஹித் சர்மாவின் சாதனையை நெருங்கும் முகமது வாசீம் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. ஐக்கிய அரபு அமீரக அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் முகமது வாசீம் 66 ரன்களையும், அலிசான் சரபு 55 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஐக்கிய அரபு அணி சார்பாக விளையாடிய கேப்டன் முகமது வாசிம் 45 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 66 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் முன்னாள் இந்திய கேப்டனான ரோகித் சர்மாவின் சாதனை ஒன்றிணையும் அவர் நெருங்கியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய வீரர்களின் பேட்டில் ரப்பர் இருக்கு.. அந்த பேட்டை நம்மால் வாங்க முடியாது – இலங்கை வீரர் பேட்டி

சர்வதேச டி20 போட்டிகளை பொருத்தவரை அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக ரோகித் சர்மா 205 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் இருக்கும் வேளையில் இன்றைய போட்டியில் முகமது வாசீம் அடித்த மூன்று சிக்ஸர்களோடு சேர்த்து 193 சிக்ஸர்களுடன் அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவரது இந்த சாதனையை முகமது வாசீம் மிக எளிதாக முறியடிப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது.

Advertisement