- Advertisement -
இந்திய கிரிக்கெட்

5 பவுண்டரி, 5 சிக்ஸ் இலங்கை ஏ அணியை பந்தாடி 11 பந்துகளில் 50 ரன்கள்.. வரலாற்று சாதனை – வைபவ் வெறியாட்டம்

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை ஏ அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் விளையாடி வருகிறது. தம்புலா நகரில் நடைபெற்று வரும் இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை ஏ அணியானது முதலில் பந்துவீசுவதாக தீர்மானம் செய்தது.

வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய வரலாற்று சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடி வரும் இந்திய ஏ அணியானது ஆரம்பத்திலிருந்தே அதிரடியான ரன் குவிப்பை வெளிப்படுத்தி வருகிறது. இந்த போட்டியில் இந்திய ஏ அணியின் சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்சி 11 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் 50 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை வைபவ் சூரியவன்ஷி நிகழ்த்தினார். இறுதியில் இந்த போட்டியில் 29 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி 8 சிக்ஸர் என 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இவரும் பிரியான்ஷ் ஆர்யாவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்து அதிரடியான அடித்தளத்தை அமைத்தனர்.

பின்னர் தொடர்ந்து இந்திய ஏ அணியானது ரன் குவித்து வருகிறது. ஏற்கனவே இலங்கை ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது இலங்கை வீரர்களின் சீண்டலால் கோபப்பட்ட வைபவ் சூர்யவன்சி அவர்களுக்கு எதிராக ஆவேசமான வார்த்தைகளை உதிர்த்திருந்தார். அதற்காக அவருக்கு ஐ.சி.சி தண்டனையும் வழங்கியிருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனையை சமன் செய்த சுப்மன் கில் – விவரம் இதோ

இவ்வேளையில் அந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த இறுதி போட்டியின் போது இலங்கை பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி பழி தீர்த்துக்கொண்டார். துவக்க வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் தற்போது கேப்டன் திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

- Advertisement -