ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் மாபெரும் சாதனையை சமன் செய்த சுப்மன் கில் – விவரம் இதோ

Shubman Gill and Rohit Sharma
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியிலும் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில் :

இந்த மூன்றாவது ஒருநாள் போட்டி முடிவடைந்த பின்னர் இந்த ஒருநாள் தொடருக்கான தொடர் நாயகன் விருது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. இந்த ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டத்தில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அவர் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது 110 பந்துகளில் 154 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இதன்மூலம் இந்த தொடரில் மட்டும் 139 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 238 ரன்களை குவித்து இந்த தொடரில் அதிக ரன்களை அடித்து வீரராக அவர் இருந்ததால் இந்த தொடர் நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பெற்ற இந்த தொடர்நாயகன் விருதின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனை ஒன்றிணையும் அவர் ஒருநாள் போட்டிகளில் சமன் செய்துள்ளார்.

அந்த வகையில் அவர் சமன் செய்த சாதனை யாதெனில் : ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை அதிகமுறை தொடர்நாயகன் விருதினை வென்ற இந்திய வீரராக நான்காவது இடத்தில் இருந்த ரோகித் சர்மாவை அவர் சமன் செய்துள்ளார். ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் ஆறு முறை தொடர்நாயகன் விருதினை வென்று தற்போது நான்காவது இடத்தில் சமநிலையில் உள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் 10 ஓவர் அவங்க அசத்திட்டாங்க.. தோல்விக்கு பின்னர் வருத்தங்களை பகிர்ந்த – ஆப்கானிஸ்தான் கேப்டன்

இந்த பட்டியலில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் 15 தொடர் நாயகன் விருதுகளையும், விராட் கோலி இரண்டாவது இடத்தில் 11 தொடர் நாயகன் விருதுகளையும் வென்றுள்ளனர். மூன்றாவது இடத்தில் சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி ஆகியோர் 7 முறை தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ளனர். அவர்களுக்கு அடுத்து தற்போது நான்காவது இடத்தில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் 6 முறை தொடர்நாயகன் விருதினை வென்றுள்ளனர்.

Advertisement