ஐ.பி.எல் ஏலத்தின் வீரர்களின் ரேட் பட்டியல் தயார். உத்தப்பா மட்டும் அடம்பிடித்து விலை மாற்றம் – விவரம் இதோ

Uthappa
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2020ஆம் ஆண்டு பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்த மாதம் 19ம் தேதி துவங்க உள்ளது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Ipl cup

- Advertisement -

இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொள்கின்றனர். அதன்படி டிசம்பர் 19ஆம் தேதி காலையில் 10 மணிக்கு நடைபெற இருந்தது. ஆனால் தற்போது இந்த ஐபிஎல் ஏலத்தின் நேரம் 10 மணிக்கு பதிலாக தற்போது மதியம் 2.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்து ஏலத்தில் வீரர்களின் அதிகபட்ச விலை மதிப்பு 2 கோடி ரூபாயும், குறைந்தபட்ச விலையாக 50 லட்சமும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் 7 வெளிநாடுகளைச் சேர்ந்த ஏழு வீரர்கள் அதிகபட்ச ஏலத்தொகையான 2 கோடி விலைபட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேக்ஸ்வெல், கம்மின்ஸ், க்றிஸ் லின், ஹசல்வுட் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோரும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் மற்றும் இலங்கை ஆல்ரவுண்டர் மேத்யூஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

kkr

இந்த ஏல நிர்ணய பட்டியலில் உத்தப்பா மட்டும் ஒரு கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்ட தனது மதிப்பை ஒன்றரை கோடி ரூபாய் உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரை எந்த அணி வாங்குவதில் ஆர்வம் காட்டும் என்பது குழப்பமாகவே உள்ளது. பியூஸ் சாவ்லா, யூசப் பதான் மற்றும் உனட்கட் ஆகியோருக்கு ஒரு கோடி ரூபாய் என ஏல மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement