நான் செய்த இந்த ஒரு விஷயத்தால மேத்யூ ஹைடன் என்கிட்ட 2-3 வருஷம் பேசாமலே இருந்தாரு – உத்தப்பா பகிர்வு

Uthappa
- Advertisement -

2007-08 ஆம் ஆண்டுகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக விளையாடி வந்த ராபின் உத்தப்பா 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் முக்கிய வீரராக விளையாடினார். அந்த உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் ராபின் உத்தப்பாவின் பெயர் இந்திய அணியில் பதிய ஆரம்பித்தது. டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதும் அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மிகப்பெரிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது.

uthappa 2

- Advertisement -

ஏற்கனவே 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்ததால் ஆஸ்திரேலிய அணி அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியை சீண்டிக் கொண்டே இருந்தது. எப்பொழுதும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பவுன்சர் வீசுவது, தேவையில்லாமல் சீண்டுவது என அந்த தொடர் சற்று விறுவிறுப்பாக சென்றது.

இந்நிலையில் அந்த தொடரின் போது மேத்யூ ஹைடன் உடன் ஏற்பட்ட சில சீண்டல் சம்பவம் குறித்து ராபின் உத்தப்பா தற்போது தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அந்த தொடரின் போது இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலிய வீரர்களிடமிருந்து அதிகளவு சீண்டல்கள் இருந்தது. அந்தத் தொடரை என்னால் மறக்கவே முடியாது. இரு அணியினரும் சீண்டலில் ஈடுபட்டோம்.

uthappa 1

நான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஹேடன் என்னை ஸ்லெட்ஜிங் செய்தார் மற்ற ஆஸ்திரேலிய வீரர்களும் எங்களது அணி வீரர்களை நோக்கி ஸ்லெட்ஜிங் செய்து கொண்டிருந்தனர். ஆனால் நான், ஜாகிர் கான் ஆகியோரை தவிர வேறு இந்திய வீரர்கள் யாரும் ஆஸ்திரேலிய வீரர்களை திரும்ப ஸ்லெட்ஜிங் செய்யவில்லை. நான் சீண்டலுக்கு ஆளாகும் போது பேட்டிங் செய்து கொண்டிருந்தேன். அதே போன்று மேத்யூ ஹைடன் பேட்டிங் செய்ய வருகையில் நான் அவரை நோக்கி ஸ்லெட்ஜிங் செய்தேன்.

Uthappa 1

அதற்கு அவரும் என்னை நோக்கி ஏதோ சொன்னார். ஆனால் அது எனக்கு சரியாக கேட்கவில்லை போட்டி முடிந்து அவரிடம் பேச சென்ற போது அதற்கான வாய்ப்பு எனக்கு அமையவில்லை. நான் அவரை நோக்கி ஸ்லெட்ஜிங் செய்த இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் என்னிடம் இரண்டு மூன்று ஆண்டுகள் பேசவில்லை. இப்போது நான் அவரைப் பார்க்கும்போது நன்றாக பேசிக் கொள்கிறோம் என ராபின் உத்தப்பா அந்த நினைவுகளை பகிர்ந்து குறிப்பிடத்தக்கது.

Advertisement