இந்திய அணியில் இடம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. எனக்கு இதுக்காவது அனுமதி கொடுங்க – பி.சி.சி.ஐ வேண்டுகோள் வைத்த உத்தப்பா

robin

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மற்ற நாடுகளிலுள்ள டி20 தொடர்களில் பரஸ்பரமாக ஆடுவது வழக்கம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் என பல நாட்டு அணி வீரர்களும் மற்ற நாட்டில் நடக்கும் கிரிக்கெட் லீக் தொடரில் கலந்து கொண்டு மற்றவர்களுக்காக விளையாடுவார்கள். ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் நிலைமை அப்படி கிடையாது.

Robin

இந்திய வீரர்கள் வெளிநாட்டில் நடக்கும் டி20 லீக் தொடரில் விளையாட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. ஒரு இந்திய வீரர் ஓய்வு பெறும் வரை மற்ற நாட்டில் நடைபெறும் தொடரில் விளையாட அனுமதி கிடையாது. தற்போது வரை இந்த சட்டம் அமலில் உள்ளது. சென்ற வருடம் இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஓய்வு பெற்றதால் கனடாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட அனுமதிக்க பட்டார்.

மற்ற வீரர்களுக்கு இது போன்று அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடரில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதிக்கவில்லை என்றால் அது வீரரின் திறமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Uthappa

குறைந்தபட்சம் இரண்டு தொடர்களில் ஆவது விளையாட அனுமதி கிடைத்தால் சிறப்பானதாக இருக்கும். வெளிநாட்டில் உள்ள சூழ்நிலையை இந்திய வீரர்கள் எளிதாக புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். கிரிக்கெட்டில் நாம் இன்னும் வளர்ச்சி அடையலாம் என்று உத்தப்பா கூறியுள்ளார். முன்னதாக சுரேஷ் ரெய்னாவும் வெளிநாட்டிலுள்ள லீக் தொடரில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஏனெனில் இந்திய வீரர்கள் பெரும்பாலும் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றனர். தேசிய அணிகளில் விளையாடும் வீரர்கள் வெளிநாடுகளுக்கு சென்று ஆடுகிறார்கள். ஆனால் மாநில அணிக்காக உள்நாட்டு தொடரில் ஆடும் வீரர்கள் இந்தியாவில் மட்டுமே பெரும்பாலான போட்டிகளில் விளையாடுகின்றனர்.

kkr

இதனால் அவர்கள் தேசிய அணியில் இடம்பிடிக்கும்போதும் சோபிக்க முடியாமல் போய்விடுகிறது. வெளிநாடுகளில் விளையாடும்போது வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். மேலும் அவர்களின் திறனும் அதிகரிக்கும். எனவே இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் இளம் வயதிலேயே வாய்ப்பினை பெற்றாலும் அவர் விரைவாகவே இந்திய அணியில் இருந்து கழற்றியும் விடப்பட்டார்.

இந்திய அணிக்காக 2006 ஆம் ஆண்டு அறிமுகம் ஆன உத்தப்பா இதுவரை 46 ஒருநாள் போட்டிகளிலும், 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியில் நீண்ட காலமாக வாய்ப்பு கிடைக்காததால் ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் உத்தப்பா தற்போது வெளிநாடுகளில் விளையாட அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.