தோனியுடன் சேர்ந்து விளையாடி 13 வருஷம் ஆச்சி. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செய்வேன் – உத்தப்பா அதிரடி

uthappa

2021 ஆம் ஆண்டிற்கான 14வது ஐபிஎல் சீசன் இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ள நிலையில் இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரிக்கத் துவங்கி உள்ளது. மேலும் இந்த சீசனுக்கான வீரர்களின் ஏலம் அண்மையில் சென்னையில் நடைபெற்று முடிந்தது. அந்த ஏலத்தில் பல்வேறு அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்தனர். இந்நிலையில் சென்னை அணி முதல் ஆளாக டிரேடிங் முறையில் ராஜஸ்தான் அணியிடம் இருந்து மூன்று கோடிக்கு ராபின் உத்தப்பாவை மாற்றிக்கொண்டது.

uthappa 1

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இணைந்து குறித்தும், தோனி உடனான உறவு குறித்தும் பேசியுள்ள உத்தப்பா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : வணக்கம் சென்னை எப்படி இருக்கீங்க ? எனக்கு தடபுடலாக வரவேற்பு கொடுத்த சிஎஸ்சி ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

இது கொஞ்சம் லேட்டானாலும், லேட்டஸ்ட்டாக இருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு விசில் அடிக்க தெரியாது. ஆனால் நீங்க விசில் அடிக்கும் மாதிரி நான் விளையாடுவேன் என தெரிவித்துள்ளார். மேலும் தோனியுடன் விளையாடு குறித்து பேசியது ராபின் உத்தப்பா : தோனியுடன் விளையாடி 13 வருடங்கள் ஆகிவிட்டது.

அவருடன் இணைந்து ஒரு தொடரை வெல்ல வேண்டும் என ஆர்வத்துடன் உள்ளேன். அதுவும் அவர் ஓய்வு பெறுவதற்குள் இதை செய்தாக வேண்டும். அதற்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் செய்வேன் என ராபின் உத்தப்பா கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

uthappa 2

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ராபின் உத்தப்பா இதுவரை 189 போட்டிகளில் விளையாடி 4602 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாட உள்ள ராபின் உத்தப்பா ஆறாவது அணியாக தற்போது சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி இப்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பையில் உத்தப்பா சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.