- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் மற்றும் கோலியை கொண்டாடுங்க.. ஆனா இப்படி பண்ண கூடாது.. ராபின் உத்தப்பா காட்டம் – விவரம் இதோ

அண்மையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதில் இருந்து தற்போது வரை இந்திய அணிக்கும் இந்திய அணியின் வீரர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதோடு கரீபியன் தீவுகளில் இருந்து நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று மும்பையில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் மிதந்து வருகின்றனர்.

இந்நேரத்தில் விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து அவர்கள் குறித்தும் பல்வேறு செய்திகள் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலி மற்றும் ரோகித் குமார் ஆகியோரது ஜெர்சி எண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்ற கருத்தும் இருந்து வந்தது. ஏற்கனவே தோனி மற்றும் சச்சின் ஆகியோரது எண்களான 10 மற்றும் 7 ஆகிய எண்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட வேலையில் தற்போது விராட் கோலியின் ஜெர்சி எண் 18, ரோகித் சர்மாவின் ஜெர்சி எண் 45 ஆகிய நம்பர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அவர்கள் இருவரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதாக அறிவித்தனர். ஆனாலும் இப்படி அவர்களது ஜெர்சி நம்பருக்கு ஓய்வு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று பலரும் பேசி வரும் வேளையில் அது தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இப்படி ஒவ்வொரு ஜெர்சி நம்பருக்கும் ஓய்வு கொடுத்து விட்டால் எதிர்காலத்தில் இடம் வீரர்களால் அவர்களுக்கு பிடித்த நம்பரை கூட ஜெர்சியில் எழுத முடியாது. ஏற்கனவே நம்பர் 10 மற்றும் 7 ஆகியதற்கு ஓய்வு அளிக்கப்பட்டு விட்டது.

இதையும் படிங்க : கோப்பை வாங்கும் முன் ரோஹித்தை டான்ஸ் ஆட வைத்தது எப்படி? மோடியின் கேள்விக்கு குல்தீப் பதில்

எனவே இனிவரும் எந்த ஒரு வீரரும் பத்து மற்றும் ஏழு ஆகிய நம்பரை ஜெர்சியில் நினைத்தால் கூட அதனை சேர்க்க முடியாது. எனவே என்னை பொறுத்தவரை இந்த அணுகுமுறை சரியானது கிடையாது என உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -