சென்னை அணி அதனுடைய முதல் போட்டியில் டெல்லி அணியுடன் தோல்வி அடைந்திருந்தாலும், அதனுடைய 2வது போட்டியில் பஞ்சாப் அணியை மிக எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனால் இந்த இரண்டு போட்டியில் ஓபனிங் வீரராக ருத்துராஜ் மிக மோசமாக விளையாடினார். முதல் போட்டியில் வெறும் 5 ரன்கள் அதேபோல் இரண்டாவது போட்டியில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து மிகப்பெரிய அளவில் மகேந்திர சிங் தோனியை மட்டுமின்றி ரசிகர்களையும் ஏமாற்றினார்.

இரண்டு போட்டியிலும் மிகப்பெரிய அளவில் சொதப்பிய ருத்ராஜ், மழை பயிற்சியின் போதும் சொதப்பி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து மகேந்திர சிங் தோனி அவருக்கு மாற்று வீரராக ராபின் உத்தப்பா விளையாட வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் ராபின் உத்தப்பா மிக அதிரடியாக விளையாடி நல்ல பார்மில் உள்ளார்.
எனவே அவருக்கு வாய்ப்பு வழங்க சென்னை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதனுடைய வலைதளங்களில் ஒரு போட்டோவை பதிவிட்டது. அந்த போட்டோவில் ராபின் உத்தப்பா இறங்கிய சிக்ஸர் அடிப்பது போல் ஒரு காட்சி இருந்தது.
Strike and Pose! 📸#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/9FkiBzCKTf
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) April 18, 2021
இதையெல்லாம் சேர்த்து வைத்து பார்க்கையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ராபின் உத்தப்பா தான் களமிறங்கப் போகிறார் என்று வெளிப்படையாக தெரிகிறது. இன்றைய போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நேற்றைய போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது, அதில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 196 ரன்கள் அடித்தது. அதை டெல்லி அணி மிக எளிதாக சேஸ்செய்து வெற்றி பெற்றது.

நல்ல பேட்டிங் ஆடக்கூடிய மைதானமாக தற்பொழுது வான்கடே மைதானம் உள்ளதால், இன்று நடக்க இருக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ராபின் உத்தப்பா களமிறங்கி அதிரடியாக ரன்கள் அடிப்பார் என்று சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.



