இது ஆஸ்திரேலியா தானான்னு ஆச்சர்யமா இருந்துச்சு.. எம்சிஜியில் இந்திய ரசிகர்களின் பலம் பற்றி கவாஜா பேட்டி

Usman Khawaja
- Advertisement -

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வீழ்த்திய நிலையில் 3வது போட்டி டிராவில் முடிந்தது. அதனால் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் இந்தத் தொடரின் நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது.

அப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்து முன்னிலையை அதிகரிக்க ஆஸ்திரேலியா தயாராக உள்ளது. மறுபுறம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள அப்போட்டியில் வெல்லும் முனைப்புடன் இந்தியா போராட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள அப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்திய ரசிகர்கள்:

நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்த மைதானம் 90000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு சிறப்புமிக்க இம்மைதானத்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு அடுத்த நாளான டிசம்பர் 26ஆம் தேதி பாக்சிங் டே ஸ்பெஷல் போட்டியாக இப்போட்டி துவங்குகிறது. அதனால் ஏராளமான ரசிகர்கள் விடுமுறை தினத்தில் துவங்கும் இந்தப் போட்டியை பார்ப்பதற்கு அம்மைதானத்தில் ஒன்று கூடுவது வழக்கமாகும்.

இந்நிலையில் மெல்போர்னில் 2021இல் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக விளையாடிய போது தங்களை விட இந்திய அணிக்கு அதிக ரசிகர்கள் ஆதரவு தெரிவித்ததாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா வியப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மெல்போர்னில் விளையாடும் போது அது இந்திய அணியின் சொந்த மைதானம் போன்ற உணர்வு வருவது வேடிக்கையான விஷயமாகும்”

- Advertisement -

ராசியான எம்சிஜி:

“கடைசியாக இங்கே அவர்களுக்கு எதிராக நான் விளையாடினேன். அங்கே இந்தியாவுக்கு ஆதரவாக நிறைய மக்கள் இருந்தார்கள். அப்போட்டியில் ஒருமுறை மைதானத்தில் இருந்த அறிவிப்பாளர் ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவு கொடுக்குமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தார். ஆனால் அங்கிருந்த ரசிகர்கள் குறைந்த சத்தத்தையே கொடுத்தனர். பின்னர் இந்திய அணிக்கு ஆதரவு கொடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்”

இதையும் படிங்க: பாபர் மட்டுமில்ல.. ரூட், ஸ்மித்தை கூட கோலியுடன் கம்பேர் பண்ணா சிரிப்பேன்.. சச்சின் கனவு விக்கெட் பற்றியும் அமீர்

“அப்போது வந்த சத்தம் நம்ப முடியாததாக இருந்தது. அதைக் கேட்ட நான் நாம் டெல்லியில் இருக்கிறோமா அல்லது எம்சிஜியில் இருக்கிறோமா? என்று ஆச்சரியப்பட்டேன். அந்தளவுக்கு இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் ஆதரவு இருக்கிறது. அது சொந்த மண்ணில் விளையாடும் எங்கள் அணிக்கு வித்தியாசமான உணர்வையும் கொடுக்கிறது” என்று கூறினார். முன்னதாக மெல்போர்ன் மைதானத்தில் விளையாடிய கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளதால் இந்தியாவுக்கு ராசியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement